Load Image
Advertisement

ரஷ்யா பாதையில் சீனா : பூமியின் மேற்பரப்பில் இரண்டாவது துளை

பெய்ஜிங் : நம் அண்டை நாடான சீனா, பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் விதமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து, 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) வரை, துளையிடும் பணியை துவக்கி உள்ளது.
Latest Tamil News

சீன அதிபர் ஜிஜின்பிங், கடந்த 2021ம் ஆண்டு, நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளிடம் பேசியபாது, பூமியின் அடிப்பகுதியை ஆய்வு செய்வதில், நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் என, தெரிவித்து இருந்தார்.

இதன்படி, மே.,30ம் தேதி, எண்ணெய் வளம் மிக்க, ஜின்ஜியாங் பகுதியில், இப்பணிகள் துவங்கியதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்த அறிக்கையில்,‛ பூமியின் மேற்பரப்பில் துளையிடும் பணிகள், 10க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகள் அல்லது பாறை அடுக்குகளில் ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும். இது, சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறையைக் கொண்டுள்ளது,' எனக்கூறப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுகள் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News இதற்கு முன்பு, பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட, ஆழமான துளை முந்தைய சோவியத் யூனியனில், ரஷ்யாவின் மர்மன்ஸ்கில் பகுதியில், பேரண்ட்ஸ் கடலுக்கு அருகே உள்ளது.

1970ம் ஆண்டு துவங்கிய, இந்த துளையிடும் பணிகள், 1989ல் முடிவடைந்தது. இது, கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என, அழைக்கப்படுகிறது. மொத்தம், 20 ஆண்டுகளில், 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழத்துக்கு, இந்த துளை அமைக்கப்பட்டது.


வாசகர் கருத்து (9)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    மக்கள் விரோத புத்தி கொண்ட கொடுங்கோலன் கம்யூனிச தலமை.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஆராய்ச்சி என்ற பெயரில் உலகத்தின் அழிவு பாதைக்கு வித்திடும் மூர்க்க குணம் கொண்ட சின்புத்தி கம்யூனிச சீனா தலமை.

  • ஆரூர் ரங் -

    மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடையவே கூடாது என நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த நம்ம ஊர் சீன ஆதரவு கம்னாட்னிஸ்டுகள் இது பற்றி வாய்திறக்க மாட்டார்கள்😇 முக்கியமாக மதுரையில் எதற்கெடுத்தாலும் எம்பிக் குதிப்பவர்.

  • பரலோகம் - Chennai,இந்தியா

    இப்படி ஒவ்வொரு நாடும் பூமியை ஓட்ட போட்டா உலகம் சல்லடை கரண்டி மாதிரி ஆயிருமே?

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் பூமியின் மேற்பரப்பில் ஆழமான ஓட்டைகளைப்போட்டு பூமி மேலடுக்கின் ஸ்த்திரத்தன்மையை - கெட்டித்தன்மையை DEMAGE பண்ணிருங்க. அப்புறம் பூகம்பம், சுனாமி போன்றவை வந்தபின்பு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூப்பாடுபோடுங்க THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement