Load Image
Advertisement

கர்நாடகாவில் போதையில் மட்டையான டாக்டர்: பெண் நோயாளிகள் தவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் டாக்டர் ஒருவர் போதையில் ஆபரேஷன் தியேட்டரில் மயங்கி விழுந்ததால் பெண் நோயாளிகள் பரிதவித்தனர்.மயங்கிய டாக்டரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ வரைலாகி வருகிறது.
Latest Tamil News

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கலசா தாலுக்காவில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணா. இந்த மருத்துவமனையில் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்சிகிச்சை பெற்று வருவது வழக்கம்

இம் மருத்துவமனையில் பெண்கள் ஒன்பது பேர் கருத்தடை ஆபரேஷன்( டியூபெக்டமி அறுவை சிகிச்சை) செய்வதற்காக காலை 8 மணி அளவில்அவர்களுக்கு மயக்கமருந்து அளிக்கப்பட்டது. ஆபரேஷன் மதியம் இரண்டு மணிக்கு நடக்க இருந்தது. ஆபரேஷனை டாக்டர் பாலகிருஷ்ணன் செய்வதாக இருந்தது.

இந்நிலையில் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆபரேஷன் அறைக்கு சென்றார். ஆபரேஷன் சிகிச்சையை துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகவே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத நிலையில் டாக்டர் இருந்ததால் உடனடியாக டாக்டர் கொப்பா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் டாக்டரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிக்கமகளூரு மாவட்ட சுகாதார அலுவலரான டாக்டர் உமேஷ் உத்தரவிட்டார்.
Latest Tamil News
டாக்டர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே கடந்த காலங்களிலும் பணிநேரத்தில் குடிபோதையில் இருந்துள்ளதாக புகாருக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (10)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Equality of Women is ensured in India ....

  • அப்புசாமி -

    கண்டவனையெல்லாம்.கூட்டியாந்து டாக்டர் ஆக்கினால் இப்படித்தான். இவபை இனிமே ஆஸபத்திரிக்கு வராம விரட்டி அடிக்கணும்.

  • Dravida Sarayam - Viluppuram,ஆர்மேனியா

    அதெல்லாம் கவலையில்லை பத்து ரூவா குடுத்திட்டு மயங்கினாரா இல்லை முன்னாடியே விழுந்தாரா?

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    ஏற்கனவே குடி போதையில் இருந்துள்ளார். ஏற்கனவே விடியல் வந்து விட்டது.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஏற்கனவே கடந்த காலங்களிலும் பணிநேரத்தில் குடிபோதையில் இருந்துள்ள ஒரு மருத்துவரை இவ்வளவு நாட்கள் பணிநீக்கம் செய்யாதது அரசின் மிகப்பெரிய தவறு. ஒருவேளை அவர் ஆபரேஷன் துவங்கி, பாதியில் இதுபோன்று போதையில் மயங்கிவிழுந்திருந்தால், அந்த ஆபரேஷன் செய்துகொண்டிருந்த பெண்மணியின் உயிருக்கே ஆபத்து ஆகியிருக்கும். இதுபோன்று ஆபத்து அந்த மருத்துவரால் வரக்கூடும் என்று அரசு ஏன் சிந்திக்கவில்லை? மக்களின் உயிர் மீது இவ்வளவுதான் அக்கறையா அரசுக்கு? எங்கே போகிறது நம் நாடு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்