ADVERTISEMENT
அண்மையில், உலகிலேயே மெதுவான நாடுகளாக எவை இருக்க முடியும் என்பது குறித்த ஆய்வினை, பிரிட்டனைச் சேர்ந்த கார் பினான்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.
அதில் அவர்கள் உலகிலேயே முதல் 10 மெதுவான நாடுகள் என்ற தரவரிசைப் பட்டியலை வெளியிட்டனர். அப்படி வெளியிட்ட பட்டியலில் எந்தெந்த நாடு எங்கெங்கு இருக்கிறது? மற்றும் நம் நாடு அதில் எந்த இடத்தை பிடித்திருக்கிறது போன்றவை குறித்தத் தகவல்களை இதில் தெரிந்து கொள்வோம்.
முதலில் அவர்கள் கணக்கெடுப்புக்கு நான்கு முதல் ஐந்து பொது காரணிகளை அமைத்துக் கொண்டனர். அதில் மெதுவான போக்குவரத்து, சராசரி நெரிசல் அளவு, சாலை தரம் போன்றவை எல்லாம் முக்கிய காரணிகளாக பங்கு வகுத்துள்ளன. எனவே பத்து மதிப்பெண் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து சார்ந்த தரத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.
பட்டியலில் இருந்த 49 நாடுகளில், இந்தியா பத்தாவது மெதுவான நாடு என்ற இடத்தை பெற்றுள்ளது. அவற்றில் மெதுவான சாலை போக்குவரத்திற்கு 6.46 கூட்ட நெரிசல் அளவிற்கு 48% சாலை தரத்திற்கு ஏழிற்கு 4.5% பெற்றுள்ளது. இதில் உள்ளவற்றிலேயே பெரு தான் முதல் மெதுவான நாடாக இடம்பிடித்துள்ளது.

இதில் அமெரிக்கா, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்து படி பார்த்தால், உலகின் அதிவேக நாடாக திகழ்கின்றன.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் சாலை வசதி கட்டமைப்பை சார்ந்த அமைகின்றது மேலும் 3.6 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு போக்குவரத்து தான் வழி வகுக்கின்றது இதனை வைத்துப் பார்த்தால் இந்த தரவரிசை பட்டியலில் மீண்டும் வளர்ந்த நாடுகளே முதலிடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் 10 மெதுவான நாடுகளின் பட்டியல் இதோ
பெரு - 8.45
ருமேனியா - 7.83
இஸ்ரேல் - 7.35
மெக்சிகோ - 7.20
லாட்வியா - 6.73
போலந்து - 6.58
பெல்ஜியம் - 6.55
சிலி - 6.49
அர்ஜென்டினா - 6.46
இந்தியா - 6.46
அதாவது இவனுங்களோட கணக்குப்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், இராக், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகள், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் மிக வேகமான நாடுகள்......