ADVERTISEMENT
இந்த காலகட்டத்தில் அனைவருமே செல்போனுக்குள் மூழ்கி விடுகிறார்கள். அதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லோரும் அதற்கு அடிமையானது போல அடங்கி விடுகிறார்கள். இப்போதெல்லாமல் செல்போன் இல்லாமல் ஒரு சிலர் தூங்குவதில்லை. தூங்கும் போது கூட வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தான் தூங்கச் செல்வார்கள். இவ்வாறு தூக்கம் இல்லாமல் செல்போன் பார்ப்பதால் எவ்வளவு பிரச்னைகள் நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கிறது என தெரியுமா?
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் (melatonin) உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும்போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது.
நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)இருக்கும். இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி, கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த பினியல் சுரப்பி (PINEAL GLAND) பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பினியல் சுரப்பி, மெலடோனினை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்துகொள்ளும்.

மெலடோனின், ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு பிறகு இருளில் சுரக்கும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. அதனால் முடிந்தவரை இரவு நேரங்களில் செல்போன் பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
மேலும், இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். அது மட்டுமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எல்லா நோய்களையும் வரவேற்கும் விதமாக உடல் கெட்டுவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!