புதிய கல்வி ஆண்டுக்கான என்.சி.ஆர்.டி., பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திலிருந்து தனிம அட்டவணை நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியல், ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் போன்ற பாடப் பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. இது கடும் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னதாக இந்தாண்டு டார்வினின் பரிணாமக் கோட்பாடும் உயர் நிலைப் பாடத்திலிருந்து நீக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை விமர்சிக்கின்றனர். பா.ஜ.க., தனது அரசியல் கொள்கையை பாடத்திட்டத்தில் புகுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

என்.சி.ஆர்.டி., மற்றும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் இது பற்றி கூறுகையில், “கோவிட் தொற்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில பாடங்கள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்கள் 11 மற்றும் 12 வகுப்பில் அறிவியல் குரூப் எடுத்தால் அதில் தனிம வரிசை அட்டவணை மற்றும் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு ஆகியவற்றைப் படிப்பார்கள். எனவே பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்.” என கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.,வை குறிப்பிட்டு பிரிட்டன் உயிரியலாளர் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் ஒரு பதிவிட்டிருந்தார். மத காரணங்களுக்காக மேற்கூறிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள கேபிடல் மைண்ட் சி.இ.ஓ., தீபக் ஷெனாய், “பாடங்கள் நீக்கப்படவில்லை. அவை வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளன. பரிணாமவியல் 12ம் வகுப்பிலும், தனிம வரிசை அட்டவணை 11ம் வகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இது மத ரீதியான நடவடிக்கை இல்லை.” என விளக்கியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
டார்வின் போன்ற அரை வேக்காடாக்களை??
குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்றால், அதற்கு பிறந்து மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக உள்ள குரங்கினம் ஏன் மனிதனாக மாறவில்லை, இந்த கேள்விக்கு விடையும் அவர்களால் தரமுடியவில்லை, எனவே குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிற டார்வின் கோட்பாடே தவறு.... அந்த பாடத்தை நீக்கியது சரி.....
பத்தாம்வகுப்பு வரை நடைமுறை வாழ்க்கையில் பயன்படும் அறிவியலை மட்டும் செய்முறையாக கற்றுக் கொடுத்தால் போதும். அறிவியலில் மேற்படிப்பு படிக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டும் பிளஸ் ஒன், டூ வில் டார்வின் போன்ற அரைவேக்காடு கோட்பாடுகளைக் கற்றுத் தரலாம். கூடுதல் பாடச்சுமை. ஏட்டுக்சுரைக்காய்🤒 மனப்பாடக் கல்வியை மட்டுமே அளிக்கும். முதல் தலைமுறை மாணவர்கள் பயந்து OUT வெளியேறும் வாய்ப்பே அதிகம். மாணவர்களுக்கோ வரி செலுத்தும் மக்களுக்கோ எவ்வித பலனும் கிடைக்காது.
இதில் இருந்து தெரிய வந்தது என்னவென்றால் காங்கிரஸ் கட்சி லாபி எல்லா நாடுகளிலும் வேலை செய்கிறது என்பது தான்.
டார்வின் பரிணாம வளர்ச்சி கொள்கை அறிவியல் பூர்வமானது. ஆனால் அதை நீக்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பிற்கு பிறகு அறிவியல் சாராத படிப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இனி டார்வின் தியரி Responsibility. இதன் அரசு சாதிக்க நினைப்பது என்ன? அறிவியலை புறக்கணிப்பது பிற்போக்கான சமுதாயம் உருவாகவே வழி வகுக்கும்