Load Image
Advertisement

பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு : ஐ.நா., சபை

Famine likely to occur in Pakistan due to economic crisis: UN Council   பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில்  பஞ்சம் ஏற்பட வாய்ப்பு : ஐ.நா., சபை
ADVERTISEMENT
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல், ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, பாக்., கில் உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவைக்கு ஏற்கனவே கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Latest Tamil News
அதோடு, இங்கு கடந்த ஆண்டு புயல், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விளைபொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாக்.,கில் அடுத்து வரும் மாதங்களில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளாவிய பொருளாதார மந்த நிலை, பாக்.,கின் பொருளாதார நெருக்கடியை அதிகரித்துள்ளது. இது, அடுத்த ஆறு மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அந்நிய கையிருப்பு பற்றாக்குறை, குறைந்து வரும் ரூபாய் மதிப்பு ஆகியவை, நாட்டின் உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனைக் குறைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (19)

  • Anand - chennai,இந்தியா

    இது எப்பவோ நடக்கவேண்டியது, அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகள் போட்ட பிச்சையில் அது தள்ளி போனது, போதாக்குறைக்கு நம்ம தாராளபிரபு பசி வேறு நோட்டை அடிக்கும் மிஷினை அளித்து அவர்களின் பஞ்சத்தை போக்கியது மட்டுமல்லாது நம் நாட்டிற்கு எதிரா தீவிரவாதிகளை அதிகளவு ஏவிவிட்டு கொக்கரிக்க துணைபுரிந்தார், எதற்கும் ஒரு முடிவு உண்டு, அது மோடி உருவில் வந்து அனைத்திற்கும் ஆப்பு வைத்து விட்டது....

  • venugopal s -

    தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மாநிலங்களால் தான் இந்தியா பாகிஸ்தான் போல் ஆகாமல் இருக்கிறது.இல்லாவிட்டால் பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களால் இந்தியா என்றோ பாகிஸ்தான் நிலையை அடைந்து இருக்கும்!

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அங்கேயாவது பூரளாதார நெருக்கடி அதுனால அப்டி அனால் இங்கே மதவாத கும்பலின் அட்டுலூசியம் அதை விட கொடூரமத்தை விரைவில் இங்கேயும் கலவரம் வேடிக்கை போகிறது அதுக்கு என்ன பண்ண போறீங்க பார்க்கலாம்

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    இந்தியா உதவுமா என்று பல இந்தியர்கள் கேட்கிறார்கள் ....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    காங்கிரஸ் மட்டும் இன்று மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால், இன்னேரம் இந்த நிலை பாகிஸ்தானுக்கு வந்திருக்குமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்