சென்னை: தமிழகத்தில், 1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல், புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளை நடத்துவதற்கான நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1,105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளை திறந்து, வரும் கல்வி ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளிகளில் பணிகளை கவனிக்க, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், பொறுப்பு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுபவர் தனது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
அதனால், மாணவர்களுக்கான கல்வி திறன் பாதிக்கப்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, தலைமை ஆசிரியர்களை விரைவில் நியமித்து, நிர்வாக பணிகளை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (9)
தமிழக ஆளும் கட்சியினர் ஆளுநரே வேண்டாம் என்னும்போது தலைமை ஆசிரியரும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்களா? அப்படி தலைமை வேண்டாம் என்பதால்தானோ என்னமோ ஸ்டாலின் தலைமையும் வேண்டாம் என்று முடிவாகி அவரவர் அவர் இஷ்ட்டத்திற்கு வேலை செய்கிறார்கள்
அப்படியே எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்ற விபரத்தையும் தேடியெடுத்து தெரிவியுங்கள். அப்பொழுதுதான் இவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சிபெறாமல் போனது ஏன் என்று மக்களுக்கு தெரியும். தற்பொழுதுள்ள ஆசிரியர்களில் எத்தனைபேர் தகுதித்தேர்வு எழுதினால் தேர்ச்சிபெறுவர். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க இதுவும் நல்ல வழி. தற்பொழுதுள்ள ஆசிரியர்களுக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பில் தீவிரப்பணி உள்ளது.
தமிழகம் கல்வியில் தலை சிறக்க தலைமையாசிரியர் இருக்கக்கூடாது
அதுக்குத்தாங்க பேனா சிலையும் கருணாநிதி சிலையும் வைக்க போறோம்
திரு.காமராஜ் அவர்களை தோற்கடித்த கூட்டம் இன்று மனம் வெதுன்பி சாகும் நாள் வரும், அவர் தன் வழக்கை முழுவதும் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்து கல்வி பயில பள்ளிகளை கொண்டு வந்தார், விவசாயம் செழிக்க அணைகளை கட்டி கம்மாய்களை நீர் நிரப்பி மக்களை பட்டியில் இருந்து காப்பாற்றினார், தொழில் வளம் பெறுக கனரக மற்றும் நூல் கருப்பு சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வந்தார் ஆனால் இன்று இருக்கும் திராவிட ஆட்சியாளர்களை பாருங்கள், திருடர்களை ஆட்சி செய்ய வைக்கும் தமிழர்களே, தமிழர்களின் கொள்கை என்ன இலவசம், குடி, சோம்பேறிகளாய் செல்போன் பார்த்தால், தமிழா நீ விழித்துக்கொள், இல்லை உன் அடுத்த தலைமுறை மிகவும் சீரழிந்த கலாச்சாரத்தில் வாழும்.