ADVERTISEMENT
சென்னை: 'தமிழக கவர்னர் வரும் 5ம் தேதி நடத்தும் கூட்டத்துக்கு சென்றால் அங்கு மாநில கல்வி கொள்கை குறித்து தான் பேச வேண்டும்' என துணைவேந்தர்களுக்கு அமைச்சர் பொன்முடி கட்டளையிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர்களுக்கு அமைச்சர் பொன்முடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

உயர்கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் வினய் உயர்கல்வி துறை கூடுதல் செயலர் பழனிச்சாமி மற்றும் தமிழக உயர்கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது வரும் கல்வி ஆண்டுக்கான செயல்பாடுகள் மாணவர் சேர்க்கை கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குதல் போன்றவை குறித்து பல்வேறு அம்சங்களை கேட்டறிந்தார்.
இதுகுறித்து துணைவேந்தர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
மாநில கல்வி கொள்கை தயாரிப்பு தாய்மொழி வழி கல்வியை ஊக்குவித்தல் அதற்கான முயற்சி எடுத்தல் குறித்து அமைச்சர் பேசினார்.
மேலும் துணைவேந்தர்கள் பலர் கவர்னர் அலுவலக தொடர்புடன் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் மாநில அரசை கேட்காமல் தங்கள் விருப்பத்துக்கு பல்வேறு முடிவுகளை எடுப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.
மேலும் 'வரும் 5ம் தேதி ஊட்டியில் கவர்னர் நடத்தும் துணைவேந்தர்களுக்கான கூட்டத்தில் தமிழக பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு பங்கேற்க விரும்பினால் அங்கு சென்று தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குறித்து கவர்னரிடம் துணைவேந்தர்கள் பேச வேண்டும்' என கேட்டு கொண்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு அமைச்சர் பொன்முடி நேற்று நடத்திய கூட்டத்தில், 'தினமலர்' நாளிதழ் குறித்து பேசினார். 'தினமலர் நாளிதழில், அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் கற்பித்தல் தரத்தில் பெயில் ஆகியுள்ள செய்தி வெளிவந்துள்ளது. அந்த செய்தியை நீங்கள் பார்த்தீர்களா?' என்றார்.
'அண்ணா பல்கலையின் சென்னை கல்லுாரியிலேயே, இப்படி கற்பித்தல் தரத்தில் குறைந்த பேராசிரியர்கள் இருந்தால், மாணவர்களுக்கு எப்படி கற்றுத்தர முடியும்? இதை பார்த்தாவது, அனைத்து பல்கலை துணைவேந்தர்களும், தங்கள் பேராசிரியர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்க முன்வர வேண்டும். இனிமேல், கற்பித்தல் தரத்தில் சிறந்தவர்களை, தகுதியானவர்களை, பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க பாருங்கள்' என, அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.
'தினமலர் செய்தியை பார்த்தீங்களா...'
வாசகர் கருத்து (15)
உயர் கல்வி அமைச்சராக நியமித்தானே
யோசிக்காமல் திரு கவர்னர் கை எழுத்து போட வைப்பது எப்படி இலவசத்தை OC என்று இகழ்வது வாரிசுகளை பாராட்டுவது சிலைக்கும் கல்விக் கெள்கைக்கும் சம்மந்தம் உண்டு பாடத்தில் புகுத்துவது வேந்தர்களுக்கு அறிவுரைதரலாமம்
நல்லா இருக்கே, அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லி விட்டாரே. பேசுவாங்க, ஹூம் ஹூம் இதுதான் சன நாயகம்.
உயர்கல்வியில் இடஒதுக்கீடு அமல் கூடாது. மெரிட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் பேச்சைக்😏 கேட்டிருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் திறன் பிரச்சினையே😛 வந்திருக்காது.கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே பாடங்கள் சரியாக புரியாமலிருப்பது திராவிட. மாடல்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்த அரசு சோற்றால் அடித்த பிண்டம் மாதிரி..