உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பங்குதாரர்களாக செயல்படுமாறு, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அழைப்பு விட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமையிலான குழுவினர், கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்த பயணத்தின் போது ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் கூறியது, வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக இருந்தது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய, சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளன. ஜப்பான் நிறுவனங்களின் ரூ. 3,231 கோடி மதிப்புள்ள முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாயப்பு கிடைக்கும்.
2024 ஜனவரி 10,11 ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். எனது அழைப்பை சிங்கப்பூர், ஜப்பான் தொழிலதிபர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
ஆசியாவின் உற்பத்தி தொழில் மையமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
அந்த புல்லட் ரயிலை கொண்டு வந்திருப்பீங்களே. அதை பாக்கெட்லேர்ந்து எடுத்து உட்டுக் காட்டுங்க. அப்புறம் எவனும் வாயத் தொறக்க மாட்டான்.
ஐயா நீங்க சாப்பான் போன டைம்ல இங்க 7000 டன் நெல்ல ஆட்டைய போட்டாங்க அய்யா........
ஆக ஆக ஆஹா!! 1000 கேடி முதலீடுன்னா சும்மாவா??எத்தனை உழைத்திருக்கிறார் எங்கள் தளபதி. இது போல எந்த மாநில முதலமிச்சரும் இத்தனை கோடி முதலீடு கொண்டு வந்ததில்லை. தளபதின்னா சும்மாவா?? இந்த கேடுகெட்ட கூத்தாடிக் கூட்டம் இதற்க்கெல்லாம் பாராட்டு கூட்டம் நடத்த மாட்டார்கள்.
Fox con, Dunlop போன்ற கம்பெனிகள் தமிழகத்தை விட்டு.போக என்ன காரணம். உண்டியல் குலுக்கிகள் மற்றும் திமுக தொழிற்சங்கங்கள் தான் காரணம். வரப்போகும் (?) கம்பெனிகள் கூடிய சீக்கிரம் உடன் பிறப்புகளின் அராஜகம் காரணமாக வேறு.இடம் நோக்கி நகர்வார்கள்.
அதற்க்கு தேவை ஆட்சி மாற்றம். ஆட்சி மாற்றத்திற்கு தேவை மக்களின் மன மாற்றம். ஊழல் அரசியவாதிகள் மாற வேண்டும்.