ஏழைகளை ஏமாற்றுவதே காங்கிரசின் உத்தி: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு
ஜெய்ப்பூர்: ஏழைகளை ஏமாற்றுவதே காங்கிரசின் உத்தி. இதைதான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செய்து வருகிறது என ராஜஸ்தானில் மெகா பேரணியை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

பாஜ., வின் 9ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு, இன்று(மே 31) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில்,மெகா பேரணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த பேரணி நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்தப்பட உள்ளது.
நாட்டின் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் ஒரு மாத காலம் இந்த பேரணி நடைபெறும். இதில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வருவதற்கு முன், பிரம்மன் கோயில் புஷ்கரை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரம்மாவின் ஆசியுடன், இந்தியாவில் புதிய படைப்புகளின் சகாப்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
2014க்கு முன் நிலைமை என்ன?. அப்போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. எல்லையில் சாலைகள் அமைக்க காங்கிரஸ் அரசு பயந்தது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் உயர்ந்து காணப்பட்டது. காங்கிரஸ் அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தடுப்பூசிகள் 60% மட்டுமே செலுத்தப்பட்டன. 100க்கு 40 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசிகள் போட முடியவில்லை. தற்போது தடுப்பூசிகள் 100% சதவீதம் அனைவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு இப்போது இருந்திருந்தால், நாட்டில் 100% தடுப்பூசிகள் செலுத்தி முடிக்க, இன்னும் 40 ஆண்டுகள் ஆகும். உயிர்காக்கும் தடுப்பூசிகள் இல்லாததால் இறந்த ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?. காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் அள்ளி வீசும் பொய்யான வாக்குறுதிகள் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இதை தான் செய்து வருகிறது.
இது ஏழைகளுக்கு அக்கட்சி செய்யும் மிக பெரிய துரோகம். ஏழைகளை ஏமாற்றுவதே காங்கிரசின் உத்தி. இதனால், ராஜஸ்தான் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற பெயரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துரோகம் செய்தது, ஆனால் பாஜக அரசு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்கு உதவியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (10)
காங்கிரஸ் ஏழைகளை மட்டும் ஏமாற்றவில்லை. அமெரிக்கா சென்றுள்ள ராகுல் அங்கு அமெரிக்கர்களிடம் இந்தியாவை பற்றியும், இந்திய பிரதமர் பற்றியும்மட்டமாக பேசி அங்கு உள்ளவர்களையும் ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்.
Vayila vadai...
இப்பத்தான் கர்நாடகாவில் யார் ஏமாத்துனாங்கன்னு தெரிஞ்சுது.
கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரு!
பெண்களுக்கான ரூ.2000 மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான ரூ 3000 ஊக்கத்தொகை இப்பொழுது தரப்பட மாட்டாது நிதி பற்றாக்குறை - கர்நாடக அரசு 😁