Load Image
Advertisement

ராகுல் கூட்டத்தில் மைக் டெஸ்டிற்காக பாடப்பட்ட தேசிய கீதம்: அவமதிக்கப்பட்டதாக பரவிய தகவல்

 'At Rahul Gandhi's US event half the participants did not even stand up for national anthem', says BJP, releases video 
ராகுல் கூட்டத்தில்  மைக் டெஸ்டிற்காக பாடப்பட்ட தேசிய கீதம்: அவமதிக்கப்பட்டதாக பரவிய தகவல்
ADVERTISEMENT
வாஷிங்டன்: அமெரிக்காவில் ராகுல் கூட்டத்தில் மைக் டெஸ்டிற்காக பாடப்பட்ட தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

10 நாள் பயணமாக அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்த காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, சமீபத்தில் ராகுலுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து ராகுல் நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று(மே31) ராகுல் ஆதரவாளர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சிலர், எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ராகுல் அங்கு இல்லை என கூறப்படுகிறது.


இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறுகையில், மைக் சோதனை செய்யவே தேசிய கீதம் நடுவில் நிறுத்தப்பட்டது என்றார். இருப்பினும் தேசிய கீதத்திற்கு மரியாதை தராமல் அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் போது ராகுல் இல்லை என்றாலும் இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


வாசகர் கருத்து (33)

  • Sivak - Chennai,இந்தியா

    இப்போ எம் பி கிடையாது காங்கிரஸ் தலைவரும் கிடையாது ...

  • sankar - chennai,இந்தியா

    இயா பாதி இலி பாதி எப்படி தேசபக்தி வரும் தேசீய கீதமும் பாதிதான் இசைக்கப்படும்

  • Bvanandan - Chennai,இந்தியா

    அர்ரெஸ்ட் ஹிம்

  • Saisenthil - Salem,இந்தியா

    உங்க மத song எதற்கும் ட்ரை பண்ண வேண்டியது தானே... ஒரு வேளை கேவலமான இருக்குமோ

  • பேசும் தமிழன் -

    பப்பு அங்கு போனவுடன். .....பாப்புவின் காற்று பட்டு விட்டது போல் தெரிகிறது ....அங்கு இருந்தவர்களும் ...அரைவேக்காடு தனமாக நடந்து கொள்கிறார்களே!!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்