சென்னை: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியும் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதனை அவர்களது தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 'மேகதாது அணை கட்டுவோம்' என தற்போது உறுதிப்பட கூறியுள்ளார்.
தண்ணீர் குறையக்கூடாது
இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: காவிரி பிரச்னையில் தமிழக காங்கிரசின் நிலையை ஏற்கனவே கூறியுள்ளோம். காவிரி தண்ணீர் குறைந்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுவர். கர்நாடகா அரசு, காவிரி தண்ணீரை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் குறையக்கூடாது; குறைந்தால் ஏற்கமாட்டோம். அதன்பிறகு இந்திய ஒருமைப்பாடு என பேசுவதில் பொருளில்லை.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையக்கூடிய எந்தவொரு செயலையும் அவர்கள் செய்தால் தமிழக காங்கிரஸ் ஏற்காது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்போடு இருப்போம். அதற்காக நாங்கள் போராடுவோம்; எந்த தியாகத்தையும் செய்வோம். தமிழக நலன் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு இடையூறு ஏற்பட்டால் உலக நீதிமன்றத்திற்கும் செல்ல தயார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், 'மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவகுமார் பதவியேற்ற உடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்' என்றார்.
வாசகர் கருத்து (27)
ஒன்று செய்யுங்கள். நீங்கள் விட்ட அறிக்கையை பப்புவையும் பப்பியையும் வைத்து சொல்ல சொல்லுங்கள்.
தமிழகத்தின் மானம் கெட்ட ஜென்மம் இவனும் கோவாலும்
இவர் என்ன லூசா..... உலக நீதிமன்றத்துக்கு போறாராம்..... அது எங்கிருக்கு......?
அல்லக்கை DKS முன்னாடி நீயெல்லாம் ஒண்ணுமே இல்லை. சொந்தமா நின்னா டெபாசிட் வாங்க மாட்டே, DKS காங்கிரஸ் அரியணை ஏத்திய தலைவன். நீ விடியளுக்கு சலாம் அடிக்கும் ஒரு 🫢. பொத்திட்டு இரு விடியலு பார்த்துக்கிவார்
நீங்க ஏன் ஒரு மூன்று பேருடன் சேர்ந்து காவிரி ஜோடோ யாத்திரை போகக்கூடாது.