Load Image
Advertisement

"தினம் ஒரு புது பிரச்னையை மக்களுக்கு பரிசாகத் தரும் திமுக": பழனிசாமி தாக்கு

"DMK presents people with a new issue every day": Palaniswami Thakku   "தினம் ஒரு புது பிரச்னையை மக்களுக்கு பரிசாகத் தரும் திமுக": பழனிசாமி தாக்கு
ADVERTISEMENT

சென்னை: தினம் ஒரு புது பிரச்னையை மக்களுக்கு திமுக அரசு பரிசாகத் தருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து பழனிசாமி கூறியிருப்பதாவது:



தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த திமுக ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர். அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால், இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தினர்.

இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர், இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (10)

  • முருகன் -

    விலைவாசி உயர்வு பற்றி மத்திய அரசிடம் கூட்டணி கட்சி என்ற முறையில் பேசினால் மக்கள் உங்களை நம்புபவர்கள்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    DMK Rule definitely a Boon to the Party Men and a Curse to the People.....l

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    பழனிச்சாமி விட ஸ்டாலின் விரைவாகத்தான் முடிவு எடுக்கிறார். அனல் என்ன அங்கே இங்கே சில குழப்பங்கள் நடக்குறது.

  • அப்புசாமி -

    இவிங்க ஆட்சியில் மக்கள்.பிரச்சனையே இல்லாம இருந்தாங்களாக்கும்?

  • duruvasar - indraprastham,இந்தியா

    நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொண்டதின் பலனை மக்கள் அறுவடை செய்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்