ஜூன் 4ல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும்!
புதுடில்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 4ம் தேதி துவங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 4ம் தேதி துவங்கும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழை தென்னிந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும். கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். டில்லியில் கனமழை காரணமாக, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை மழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது. வெப்ப அலைகள் குறைந்து வருவதால், இனி படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
கம்யூனிஸ்டுகள் ஏழை எளிய மக்களுக்காக அரசு நடத்துபவர்கள் அதனால்தான் காலம் தப்பாமல் மழை பெய்கிறது
பருவ மழை வெயில் இரண்டுமே உயிர்கள் வாழ தேவை.. மனிதன் மட்டும் மழையை குறைக்கவும் வெயிலை அதிகரிக்கவும் கெடுதல் செய்கிறான்.