Load Image
Advertisement

"வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதிக்கும் ராகுல்": அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு


புதுடில்லி: ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

Latest Tamil News


10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஸ்டான்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் பேசுகையில், பார்லிமென்டில், செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட்.

உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ., விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:



ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார். அதே நேரத்தில் நமது பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தின் போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்து, இந்தியா வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். 'பிரதமர் மோடி தான் பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதை, ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Latest Tamil News

சமீபத்தில் ராகுல் வெளிநாட்டு பயணத்தின் போது, இந்தியாவை அவமதித்து பேசினார். இந்த விவகாரம் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடியாமல், அவை நேரம் வீணடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்ககது.



வாசகர் கருத்து (23)

  • அனந்தராமன் -

    இந்த இத்தாலி நாட்டு தேசிய துர்க்கை உடனே கைது செய்ய வேண்டாம்?

  • முருகன் -

    ராகுல் இந்தியாவை அவமதிக்கவில்லை உங்கள் ஆட்சியை பற்றி பேசத்தான் செய்கிறார்

  • Arunachalam Saptharishi - Chennai,இந்தியா

    ஏன் அவர் வெளிநாடு செல்ல அணுமதிக்க பட்டார்?

  • ரமேஷ் -

    அவனெல்லாம் சீனாவின் கைக்கூலி, அவன் மட்டுமல்ல இன்னும் நிறைய கேடுகெட்ட அரசியல்வாதிகளும் இப்படிதான்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அமெரிக்காவில் உள்ள அந்த ஸ்டான்போர்டு பல்கலை அதிகாரிகள் எப்படித்தான் இந்த கேடுகெட்ட மனிதனை உள்ளே அனுமதிக்கிறார்களோ தெரியவில்லை. அனுமதிப்பதும் இல்லாமல் பேசவும் சொல்கிறார்கள். அமெரிக்கா நாட்டு அதிபர் திரு பைடனே மோடியை பற்றியும், இந்தியாவை பற்றியும் பெருமையாக பேசுகிறார். ஆனால் இந்த கேடுகெட்ட ஜென்மம் அங்குபோய் இந்தியாவை தரம் குறைத்து பேசுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்