ADVERTISEMENT
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, நாளை(ஜூன் 01) டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வருகிறார்.
டில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கெஜ்ரிவால் நாளை(ஜூன் 01) சந்திக்கிறார். அப்போது, மத்திய அரசு அவசர சட்டம், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் பார்லி., தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
இதுவரை மத்திய அரசு அவசர சட்டத்திற்கு எதிராக, கெஜ்ரிவால் நேரில் சென்று, மே.வங்க முதல்வர் மம்தா, பீஹார் முதல்வர், உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்து, ஆதரவு திரட்டியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
"விடியலும் விளக்குமாறும் "- சந்திப்பு நடத்தினால் நல்லது கிட்டும்
ஜீரோவும் ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோதானே.
கெஜ்ரிவால் டெல்லி நிரந்தர முதல்வர் போல் நடப்பது கேவலம். டெல்லி தலைநகர். அந்நிய பின் புலம் கொண்ட கெஜ்ரிவால் அதிக அதிகாரம் பெறுவது நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லது அல்ல.?
இந்த கோமாளிக்கு வேற வேலை இல்லியா ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்படி ஊர் ஊராக விமான பயணம் செய்தே அதிக செலவு செய்கிறார்களே .போனில் பேச கூடாதா.