ADVERTISEMENT
சென்னை : 'சிறைகளில் துண்டு பீடி, சிகரெட், கஞ்சா என, போதை வஸ்துகளின் புழக்கம் அதிகரித்துவிட்டதால், அதிரடி சோதனை நடத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. இவற்றில், 24 ஆயிரத்து, 342 பேரை அடைக்க முடியும். சிறைகளில் தற்போது, கைதிகளுக்கு, துண்டு பீடி, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் தாரளாக கிடைக்கின்றன. 21 பீடிகள் கொண்ட கட்டு, 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பிரியாணி, 800 ரூபாய்க்கு விற்கின்றனர். மொபைல் போன் புழக்கமும் அதிகரித்து விட்டது. ஆசன வாயில், மொபைல் போன்களை பதுக்கும் வாடகை கைதிகள் அதிகரித்து விட்டனர். நிதி நிறுவன மோசடி வழக்குகளில் கைதாகி வரும் நபர்களுக்கு, வீட்டு சாப்பாடு போல தயாரித்து தரப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
அறைகளில் அடைப்பட்டு கிடக்கும் கைதிகளை, உடல் நலன் பாதிக்கப்பட்டவர்போல நடிக்கச் சொல்லி, மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர். சிறைகளில் இருக்கும் கேன்டீன் வாயிலாக, கைதிகளுக்கு விதவிதமான உணவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான தொகையை, கைதிகளின் உறவினர்கள் தந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், வெளிநாடுகளுக்கு கூட்டாளிகளை தொடர்பு கொண்டனர். மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., கண்டறிந்து, தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில், 2021ல் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின், சிறைகளில் பெரிய அளவில் சோதனை நடத்தப்படவில்லை. அதிரடி சோதனைக்கு சிறைத்துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி உத்தரவிட வேண்டும் என, அவருக்கு கோரிக்கை மனுவும் அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (13)
A to Z Drugs available in many of the Prisons in India ....
ஒரு சிலர் சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்கின்றனர். ஏன் தெரியுமா? ஆம், சிறைச்சாலையில்தான் எந்தவித போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக போதைபொருட்களை பயன்படுத்தமுடியும், அங்குள்ள ஊழியர்களை நன்றாக கவனித்துவிட்டால்.
திராவிட மாடல் சிறை
பொதுவெளியில் கிழித்தாகிவிட்டது . அடுத்து சிறை வளாகம். தமிழ்நாடு போதை தலைநகரம் என்ற சிறப்பை அவ்வளவு எளிமையாக கைநழுவ விடாது இந்த திராவிட மாடல் அரசு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எல்லோருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டு எல்லா போதை வஸ்துக்களையும் மறைச்சி வெச்சுட்டு அதிரடி சோதனைன்னு நடத்துனா நாலு பீடித் துண்டுகளும், காலி வத்திப்பெட்டியும் கிடைக்கும் சோதனை வெற்றி. எல்லாற்றையும் ஒழிச்சுட்டோம்னு சொல்லிடலாம்.