ADVERTISEMENT
சென்னை, மரம் வளர்ப்பு மற்றும்இயற்கை சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு, பலருக்கும் மரக் கன்றுகளை பரிசளித்து வரும் ஆட்டோ ஓட்டுனரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று நேரில் வரவழைத்து பாராட்டினார்.
கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், 50. இவர், 25 ஆண்டுகளாக சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார்.
பாதுகாப்பு பிரசாரம்
புவி வெப்பமடைதலை தடுப்பதிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் ஆர்வம் உள்ள இவர், தன் ஆட்டோவில் சிறிய தோட்டம் வளர்த்து, இயற்கை சூழல் பாதுகாப்பு பற்றி, பிரசாரம் செய்கிறார்.
தவிர, தன் மாத வருமானத்தில், 10 சதவீதத்தை, மரக் கன்றுகள் வாங்குவதற்காக செலவிடுகிறார்.
அந்த மரக் கன்றுகளை பலருக்கும் தானமாக வழங்கி, மரம் வளர்த்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
பாராட்டு
இதுகுறித்து அறிந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று, ஆட்டோ ஓட்டுனர்குபேந்திரனை நேரில் வரவழைத்து, பாராட்டு தெரிவித்தார்.
மேலும், இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, நாட்டுக்கும், இயற்கை வளத்துக்கும், உறுதுணையாக செயல்பட குபேந்திரனை ஊக்குவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!