Load Image
Advertisement

வரி செலுத்துவோரை குறிவைத்து மோசடி.! எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்

Fraud targeting tax payers. Ministry of Home Affairs warns   வரி செலுத்துவோரை குறிவைத்து மோசடி.! எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்
ADVERTISEMENT


வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து, 'டேக்ஸ் ரீபண்டு' பெயரில் நடைபெறும் மோசடி வலையில் சிக்கி விட வேண்டாமென மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதி கடந்த வாரம் துவங்கியது. ஐ.டி.ஆர் -1, ஐ.டி.ஆர் - 4 படிவங்களை தாக்கல் செய்வதற்கு, வரும் ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தற்போது மோசடி பேர்வழிகள், சீசனுக்கு ஏற்றார் போல, தங்களை அப்டேட் செய்து கொண்டு மோசடியில் இறங்கி வருகின்றனர்.


அந்த வகையில், தற்போது டேக்ஸ் ரீபண்டு பெயரில் புதிய மோசடி இமெயில், குறுஞ்செய்தியை அனுப்பி வருகின்றனர். அதில் போலி வருமான வரித்துறை இணையதள முகவரியை இணைத்து அனுப்புகின்றனர். வங்கி அல்லது தனிப்பட்ட விவரங்களை தெரியாமல் அளிப்போரிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.Latest Tamil News
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு தனது டிவிட்டர் கணக்கில்,


'வரி செலுத்துவோரை குறி வைத்து, டேக்ஸ் ரீபண்டு பெயரில் மோசடி பேர்வழிகள் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதுபோன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி/மின்னஞ்சலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இந்த மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணுக்கோ, cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (12)

  • அப்புசாமி -

    15000 கோடிக்கு மேலே மதிப்புள்ள BCCIக்கு ஜீரோ வருமான வரி. ஜெய் ஷா வின் சொத்து 150 கோடிக்கு மேல். இதுதான் இந்திய வருமான வரியின் இலக்கணம்.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    ஏமாருபவர்கள் இருக்கும்வரை இது தொடரும்

  • DVRR - Kolkata,இந்தியா

    எனக்கும் வந்தது உங்கள் ரூ 44,431 ரீஃபண்ட் என்று

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இது போனற குற்ற வாளிகளின் தண்டனை கடுமையாக இல்லை. தக்க சட்டம் கொண்டு மேற்படுத்த வேண்டும். எதிர்க்கும் கும்பலையய் மக்கள் விளக்கு மாரால் பூசை செய்யவேண்டும் .நீதி மன்றங்களும் இந்தமாதிரி குற்ற செயல்களுக்கு தண்டனைய வழங்கும் போனது அதிக பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.

  • அப்புசாமி -

    டிஜிட்டல் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கு. தொட்டதெல்லாம் காசுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement