Load Image
Advertisement

ராக்கெட் மிஷனில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா..!

China to compete with India in rocket mission..!   ராக்கெட் மிஷனில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா..!
ADVERTISEMENT
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ முன்னதாக ஜிஎஸ்எல்வி எஃப்-12 செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சோதனை செய்தது. வரும் ஜூலை மாதத்தில் நிலவுக்குச் செல்லும் செயற்கைக்கோளான சந்திரயான் ஏவுதலுக்குத் தயாராகிவரும் இஸ்ரோ இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது சீனா, சென்ஷோ 16 விண்வெளி மிஷனில் மும்முரம் காட்டிவருகிறது. இஸ்ரோவின் செயற்கைக்கோள் சோதனைக்கு இணையாக சீனா தனது விண்வெளி ஆராய்ச்சி சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது.
Latest Tamil News
'புனிதமான விண்வெளி ஓடம்' எனப் பொருள்படும் ஷின்சோ 16 ராக்கெட்டில் மூன்று சீன விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் ஜீகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மூன்றுபேர் கொண்ட இந்த ராக்கெட் காலை 9.31 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. விண்ணில் உள்ள சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இந்த ராக்கெட் அனுப்பப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி இது விண்ணுக்கு அனுப்பப்படும் ஐந்தாம் சீன ராக்கெட் சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (8)

  • jagan - Chennai,இலங்கை

    சீனன் அமெரிக்காவுக்கே டப் குடுக்குறான். சீன ஸ்பைஸ் ஸ்டேஷன், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவது என்று 25 ஆண்டுகள் நம்மை விட முன்னே உள்ளான். இதில் என்ன போட்டி , ஒரே தமாஷ் தான்

  • குமரி குருவி -

    போட்டி போட்டியாக இருப்பதுஆரோக்கியம் தரும்..இயலாமையில் பொறாமை படக்கூடாது..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சீனாவின் போட்டியை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தங்கள் பணியில் மேலும் திறம்பட பணியாற்றி மேலும் மேலும் சாதிக்கவேண்டும். வாழ்த்துக்கள்.

  • SANKAR - ,

    this is no "contest" or " challenge" Chinese are sending men to the space station.we are far away from that level of performance.

  • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

    எல்லா நாடுகளிலும் போர்மேகம் தணியாமல் பாரத்துக்கொள்ளும் அமெரிக்காவை ரசியா சீனா இந்தியா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் சேரந்து புறக்கணித்தாலே போதும் உலகம் அமைதியாகிவிடும்,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement