Load Image
Advertisement

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இன்னும் கடுமையாக உழைப்போம்: பிரதமர் மோடி

"Every Decision Made...": PM Modi's Tweet on 9 Years Of BJP Government இந்தியாவை வளர்ந்த நாடாக்க இன்னும் கடுமையாக உழைப்போம்: பிரதமர் மோடி
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, இன்னும் கடுமையாக உழைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று, நாட்டிற்கு சேவை செய்வதில் 9 ஆண்டுகள் நிறைவு செய்கிறோம். பணிவும், நன்றியுணர்வும் நிறைந்து நிற்கிறேன். அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது எல்லாமே, மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான். இந்தியாவை வளர்ந்த நாடாக்க, இன்னும் கடுமையாக உழைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


பிறகு மற்றொரு அறிக்கையில் மோடி கூறியுள்ளதாவது: 9 ஆண்டுகளாக இந்தியாவின் ஏழை மக்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபட்டுள்ளோம். பல முன்முயற்சிகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளோம். ஒவ்வொரு குடிமகனை உயர்த்தவும், அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும் எங்களின் முயற்சி தொடர்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (14)

  • veeramani - karaikudi,இந்தியா

    இந்திய மக்களின் மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களின் காலத்தில் இந்திய பிரஜைகள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். நமது எதிரிகளான பாகிர்ஸ்தான், சீனா விழி பிதுங்கி நிற்கிறது. அநேக நாடுகளில் பொருளாதாரம் கேளு விழுந்துவிட்டது, ஆயினும் நமது இந்தியாவில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்திய ராணுவம் உலகின் மதிப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. அண்டை நாடுகள், நம்மை மிதித்தவர்கள் சாடிலிட்ட்களை நமது ராக்கெட்கள் மூலம் விண்வெளிக்கு அனுப்புகின்றோம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதியும் உண்டு. இந்திய மக்களின் வாழ்வு சிறக்க கடுமையாக உழைத்த திரு மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்போம்

  • R Kay - Chennai,இந்தியா

    முடியாது முடியாது டாஸ்மாக் தேசத்தில், நாங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடுவோம்.

  • sridharan RAMDAS - Edmonton,கனடா

    வேலை இல்லாதவர்களுக்கு வேலை செய்ய பயிற்சி கொடுக்கும் புரட்சியினை அரசு ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சீனாவுடன் போட்டி போட முடியும்.

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    அதானி உலக முதல் பணக்காரராக வரும்போது, இந்தியா வளர்ந்த நாடாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

  • venugopal s -

    ஏற்கனவே நீங்கள் ஒன்பது வருடங்களாக நாட்டுக்கு உழைத்த உழைப்பையே எங்களால் தாங்க முடியவில்லையே, இன்னும் உழைக்கப் போகின்றீர்களா, பயமாக இருக்கிறதே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்