ADVERTISEMENT
மதுரை: மதுரையைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் ஹரி நாராயண், டில்லி எய்ம்ஸ் நடத்திய எம்.சிகியூ., நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஹரி நாராயண் கூறியதாவது: எனது பெற்றோர் டாக்டர்கள் லதா, முருகன். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தேன். சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்.எஸ் அறுவை சிகிச்சை முடித்துள்ளேன். அடுத்ததாக அதில் சிறப்பு பிரிவாக குடல் அறுவை சிகிச்சைக்கான எம்.சிகியூ., படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் டில்லி எய்ம்ஸ் சார்பில் பங்கேற்றேன். இதில் 100க்கு 64 மதிப்பெண்கள் பெற்று நாட்டில் முதல் இடத்தில் தேர்வாகியுள்ளேன்.
மூன்றாண்டு படிப்பு முடித்த பின் மீண்டும் மதுரை வந்து தென்மாவட்ட மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை தொடர விரும்புகிறேன். செலவுகளை குறைத்து நோயாளிகளை அலைக்கழிக்காமல் சேவை செய்ய ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அளவில் முதலிடம் பிடித்த மதுரை மருத்துவ மாணவர் டாக்டர் ஹரி நாராயண், விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சங்குமணியின் மருமகன்.
வாசகர் கருத்து (6)
Congratulations....
நல்ல சிந்தனை. வாழ்த்துகள்
தமிழன் பெருமை தரணிஎல்லாம் பரவட்டும்
Congratulations wish you a brilliant career in your life.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
செலவுகளை குறைத்து நோயாளிகளை அலைக்கழிக்காமல் எல்லா மருத்துவர்களும் சேவை செய்யவேண்டும் என்பது மக்களின் ஆசையும் கூட. வாழ்த்துக்கள்.