Load Image
Advertisement

திமுக.,வுடன் மதிமுக.,வை இணைக்க சொன்ன திருப்பூர் துரைசாமி மதிமுக.,வுக்கு முழுக்கு

Duraisami who asked to merge DMK with MDMK resigned திமுக.,வுடன் மதிமுக.,வை இணைக்க சொன்ன திருப்பூர் துரைசாமி மதிமுக.,வுக்கு முழுக்கு
ADVERTISEMENT


திருப்பூர்: திமுக உடன் கட்சியை இணைக்க வலியுறுத்தி வந்த ம.தி.மு.க., அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.


மதிமுக அவைத்தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. மதிமுக தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சி பொறுப்புகளில் தலையிடுவதில் இருந்து போர்க்கொடி தூக்கி வந்தார். சமீபத்தில் அவர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், 'மதிமுக.,வை துவங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.

ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுக.,வில் இணைந்துவிட்டனர்.


மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுக.,வை தாய் கட்சியான திமுக.,வுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது' என வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் வைகோ தரப்பில் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் துரைசாமி திமுக.,வில் இணைவார் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 30) மதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி அறிவித்துள்ளார்.

Latest Tamil News
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை திமுக.,வுடன் இணைத்து விடுவது நல்லது. ஏனெனில் மதிமுக.,வுக்கு என்று தனியாக எதிர்காலம் இல்லை. ஆகவே, மதிமுக.,வின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (18)

  • ரமேஷ் -

    ம தி மு க அப்படி என்ற ஒரு கட்சி இருக்கின்றதா?வைக்கோவை போன்ற ஒரு கேவலமான அரசியவாதியை நான் பார்த்ததே இல்லை.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த பதவியையும் நல்ல விலைக்கு வையாவூரி

  • s vinayak - chennai,இந்தியா

    இலவு காத்த கிளி . பாவம் ஒன்றும் தேறவில்லை போல.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இனிமேல் மதிமுக சிலசரக்கு கடை முழுவதும் வையாவூரிக்கு மட்டுமே சொந்தம்

  • செந்தில்குமார் திருப்பூர் -

    அப்பாடா....... 30 வருஷத்துக்கு முன்னாடி1993ல் எங்க ஊர் காரரை பிடித்த சனி இன்றோடு ஒழிந்தது சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் சொல்லி பவானி ஆற்றில் போய் மூணு தடவ முங்கி எந்திரிச்சு வாங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்