Load Image
Advertisement

தடகள வீராங்கனை என தெரியாமல் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது கை வைத்த தி.மு.க.,வினர்

Gayatri who achieved in athletics that day… The female officer who was attacked in the IT raid தடகள வீராங்கனை என தெரியாமல் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது கை வைத்த தி.மு.க.,வினர்
ADVERTISEMENT
சென்னை: கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் வீடு முன், அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, தடகள வீராங்கனை என்பதும், பல போட்டிகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றவர் என தற்போது தெரியவந்துள்ளது.

நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர் குறித்து அறியாமல் தாக்குதல், நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கரூரில், ராமகிருஷ்ணாபுரத்தில், கடந்த 26 ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த குவிந்த தி.மு.க.,வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் வந்த வாகனங்களை சேதப்படுத்தினர்.

இதனை தட்டிக்கேட்ட அதிகாரிகளையும் தாக்கினர். பெண் அதிகாரியான காயத்ரி என்பவரின் பைகளை பிடுங்கி அதில் என்ன வைத்துள்ளீர்கள் என அத்துமீறியுள்ளனர். அனைத்து அதிகாரிகள் மீதும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது. இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான வருமான வரித்துறை காயத்ரி, தடகள விளையாட்டில் சாதனை படைத்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதே தடகள போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், பிளஸ் 2 தேர்வில் 91 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
தடகள விளையாட்டில், 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம் வென்றார்.
2008 புனேயில், நடந்த காமன்வெல்த் இளையோர் விளையாட்டு போட்டியில் 100 மீ., தடை தாண்டுதல், மும்முனை தாண்டுதலில் வெள்ளியும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் வெண்கலமும், 2016 அசாமில் நடந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீ., தடை தாண்டுதலில் தங்கமும் வென்றுள்ளார்.
இது குறித்து அறியாமல் காயத்ரி மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.


வாசகர் கருத்து (47)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  எவனாய் ஏவலால் இருந்தால் எண்களுக்கென்ன எங்களின் கொள்கைய்யகளின் படி தட்டி கேட்கும் தைரியம் இஙகு யாருக்கிருக்கிறது. அதை சிலர் மமதையை என்று கூரலாலம். ஆனால் அது எங்களுடன் பிறந்த வீரா அடையாளம்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  தி மு க்கா என்றால் அதன் வழக்கங்களில் அராஜகம் என்ற விதி இருக்கிறது . அதைய்ய கட்சி வீரர்கள் மீர முடியுமா?

 • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

  தெரிந்தாலும் தெரியாடியும் எப்படி இப்படி நடந்துக்கலாம், கட்டு மரம் கெடுத்து விட்டு போய்டுச்சு.... அது காட்டிய வழியை இதுக கடை பிடிக்குது...

 • THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா

  இதெற்கெல்லாம் கரணம் நம்ம நீதித்துறையின் வாய்தா கோடைவிடுமுறை அவர்களின் செயல் பாடுகளை விமரிசித்து அவைகளை தீர்த்த முடியாத நிலை வருசக்கண்ணில் கேஸ் நடத்த வழிகள்

 • ramesh - chennai,இந்தியா

  இங்கே விளையாட்டு வீராங்கனைக்கு ஆதரித்து பேசும் இவர்கள் பாலியல் குற்ற சாட்டு கூறும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக கருது கூறுபவர்கள் இவர்களின் மன நிலை எப்படி?பட்டது என்று சொல்லாமலே விளங்குகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்