ADVERTISEMENT
''யாருக்கு பதவி தரணும்னு அப்பா, மகனுக்குள்ள போட்டி நடக்கு வே...'' என, கடைசி தகவலை கையில் எடுத்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தி.மு.க., மாதிரியே, ம.தி.மு.க.,வுலயும், ஒரு துணை பொதுச் செயலர் பதவியை, மகளிருக்கு ஒதுக்க முடிவு பண்ணியிருக்காவ... இப்ப, கட்சியின் மகளிர் அணி செயலரா இருக்கிற, திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ரொக்கையாவை துணை பொதுச் செயலராக்க, துரை நினைக்காரு வே...
''ஆனா, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராணி செல்வினுக்கு, அந்தப் பதவியை குடுக்க, அவரது அப்பா வைகோ ஆசைப்படுதாரு...

''ஏற்கனவே, துணை பொதுச் செயலரா இருந்த நாசரேத் துரை மறைவுக்கு பின், 'நாடார் சமுதாயத்துக்கு கட்சியில பிரதிநிதித்துவம் இல்லை'ன்னு, சிலருக்கு மனக்குறை இருக்கு வே... அதை தீர்த்த மாதிரியும் இருக்கு மேன்னு வைகோ யோசிக்காரு... இதுக்கு, அவரது மகன் சம்மதிப்பாரான்னு கட்சிக்குள்ள விவாதம் நடந்துட்டு இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அந்தக் கட்சியில பதவிக்கு வர்றதுக்கும், ஒரு மனோதிடம் வேணும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.
வாசகர் கருத்து (7)
மதிமுகவில் இருக்கிறதா ?
ம.தி.மு.க. ஏன் ...களையே தேர்ந்தெடுக்கின்றது?
வயசான வைகோ முடிவு பண்ண வேண்டாம் துரை வைகோவே முடிவு பண்ணட்டும் ,யாரு கட்சிக்கு நல்லா சேவை பண்ணுவாருன்னு முடிவு பண்ணட்டும் ,துரை வைகோ பொண்டாட்டியே போட்டுட்டா சால சிறந்தது இல்லஈனா அவரை கேட்டு போட்டுருங்க .
எதுக்கும் திமுக விடம் கேட்டு விட்டு முடிவு செய்யுங்கள்.ஏனென்றால் விரைவில் அதில் தானே இணைய போகிறீர்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இது என்ன கேக்ள்வி பதவி வைகோ மாருமகளுக்கு தான் . குடும்ப பொறுப்புடன் கட்சி பொறுப்பும் கூடுதலாகா வாரிசுகளுக்கு தான் திராவிட பெயர் தங்கி நிற்கும் கட்சிகளுக்குள்ளை. (ஆ தீ மு க்காவிற்கு சிறிது காலம் பிடிக்கும்)