கோயில் காளை இறப்பு: கிராமத்தினர் அஞ்சலி
திருப்புத்தூர்--திருப்புத்தூர் அருகே என்.புதூரில் இறந்த கிராமக் கோயில் காளையின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
நெடுமரம் ஊராட்சியைச் சேர்ந்த இக்கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த கோயில் காளை நேற்று இறந்தது. சில நாட்களுக்கு முன் காளைகளுக்கிடையே நடந்த மோதலில் காயம் அடைந்த காளைக்கு கிராமத்தினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் 3:00 மணிக்கு இறந்தது. கிராமத்தினர், மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் காளையின் உடலை பொது இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முனியன் கோயில் எதிர்புறம் அடக்கம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!