ADVERTISEMENT
விருதுநகர்--விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் எடை குறைந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிறப்புசிகிச்சை அளித்துஅதிகரிக்க செய்தனர். இவர்களை டீன் டாக்டர் சங்குமணி பாராட்டினார்.
விருதுநகர் வெம்பக்கோட்டை கீழத்தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, வனிதா தம்பதிக்கு மார்ச் 14ல் 6 மாதம் 2 வாரத்தில் குறை மாதத்தில் 640 கிராம் மிக குறைந்த எடையில் சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் சங்குமணியின் அறிவுரைப்படி அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் ஜவஹர், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவர் முருகேசலட்சுமணன் தலைமையில் டாக்டர்கள் சண்முகமூர்த்தி, பிரியங்கா, ரோகிணி, ராஜசேகர், உமாதேவிஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
இவர்களை பாராட்டி டீன் டாக்டர் சங்குமணி கூறியதாவது: இக்குழந்தைக்கு ஒரு மாதம் முழுவதும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இங்கிருந்த இரண்டரை மாதங்களும்உயர்ரக மருந்துகள் வழங்கப்பட்டன. கண், காது, இருதயம் போன்ற உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள், செவிலியர்களின் தீவிர உயர் ரக சிகிச்சையால் குழந்தை நன்கு தேறி தற்போது 1 கிலோ அளவில் நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்., என்றார்.
பெற்றோர் மாரிமுத்து, வனிதா கூறுகையில், நாங்கள் இருவரும் பட்டாசு தொழிலாளிகள். அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பவர்கள். குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால் வருத்தம் அடைந்தோம். ஆனால் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கி குழந்தை தற்போது நன்கு தேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு மாதத்தில் பல நூறு சாதனை நடக்கிறது அதை அவர்கள் விளம்பர படுத்தி கொள்வதில்லை ஆனால் ஏன் அரசு மருத்துவமனைகளில் வீண் தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள்