பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு
சென்னை : 'மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், 'ஹிஜாப்' அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், நேற்று தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனு:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில், முஸ்லிம் பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ஹிஜாப் அணிந்து வந்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து, அரசு பணி செய்யலாம் என, தமிழக அரசு எந்த அரசாணையையும் வெளியிடவில்லை.
தமிழக அரசு அலுவலகங்களில், மதம் சார்ந்த புகைப்படங்கள் வைக்கக் கூடாது என அரசாணை உள்ளது. ஆனால், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், 'ஹிஜாப் அணிந்து தான் பணிபுரிவேன்' என கூறி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!