அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது.
15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மழை ஓய்ந்ததும் வெற்றி இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 கடந்து வெற்றி பெற்றது. அணியின் துவக்க வீரர்கள் ருத்ராஜ் 26 ரன்களும் கான்வே 47 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். ரஹானே 27 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ராயுடு 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிவம் துபே ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன் தேவை இருந்த நிலையில் ஜடேஜா 1 சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி பந்தை பவுன்டரிக்கு விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இதன் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது சென்னை அணி.
வாசகர் கருத்து (12)
தமிழருக்கு என்னடா பெருமை ஒரு தமிழன் கூட விளையாடாத அணியில் வெற்றியில் மட்டும் தமிழர்கள் பங்குகொள்ள முடியுமா? முதலில் சென்னை அணியின் தலைவனாக ஒரு தமிழனையும் தமிழ் நாட்டு வீரர்களையும் சேர்த்து விளையாடுங்கள் அப்புறம் தமிழர்கள் அனைவரும் வெற்றியில் பங்கு கொண்டு பெருமைப் படலாம் இந்த வெற்றியில் தமிழருக்கு பங்கு இல்லை அவர்கள் பெருமைப்பட முடியாது/கூடாது பஞ்சாபி, பீகாரி, உ .பி, சிந்தி, சிங்களர்கள் பெருமைப்படலாம். அடுத்தவர்களை நாட்டை ஆளவிட்டும் நாட்டிற்காக ஆடவிட்டும் பெருமைப்படும் கூட்டம் தாண் இந்த தமிழின கூட்டம் நன்றி வணக்கம்
csk வில் ஆடியவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது தான் நவீன கார்பொரேட் மாடல், titans அணியில் கூட இரு தமிழர் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய தமிழர் போல் உள்ளார், கார்பொரேட் இனால் நம் அடையாளம் இழப்போம் இப்படிக்கு நாம் தமிழர்
வாழ்த்துக்கள்
கிரிக்கெட் சூதாட்டத்தால் கிரிக்கெட் பார்க்கும் ஆசையே போய் பலருக்கு ரொம்ப நாளாச்சு,.கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்கள் ஆக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கறாங்க ...
இது தான் ஆரம்பம் இன்னும் இன்னும் குஜராத்தை ஓட ஓட விரட்டுவோம்... நம் இந்திய மண்ணை விட்டு...