ADVERTISEMENT
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் கட்சிக்கு இருந்த ஒரே எம்.எல்.ஏ.,வான பேரோன் பிஸ்வாஸ், திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்துக்கு, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
சாகர்திகி தொகுதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பேரோன் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நேற்று நடந்த திரிணமுல் காங்., நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சி எம்.பி., அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், காங்., - எம்.எல்.ஏ., பேரோன் பிஸ்வாஸ் திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.
''சாகர்திகி தொகுதியில் நான் வெற்றி பெற்றதற்கு காங்., காரணமல்ல. என் சொந்த செல்வாக்கு காரணமாகவே மக்கள் எனக்கு ஓட்டளித்தனர்,'' என, பேரோன் பிஸ்வாஸ் தெரிவித்தார்.
''இனியாவது, பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்து மேற்கு வங்கத்தில் எங்களை எதிர்ப்பதை காங்., நிறுத்திவிட்டு, பா.ஜ.,வுக்கு எதிராக உண்மையாக போராட வேண்டும்,'' என, திரிணமுல் காங்., - எம்.பி., அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
பப்பு என்ன சொல்றிங்க