Load Image
Advertisement

நுால் கொள்முதல் அனுமதி மறுப்பால் ரூ.பல கோடி நஷ்டம்: நெசவாளர்கள் வேலை இழப்பு

Due to denial of nul purchase permission, loss of crores of rupees and loss of jobs to weavers   நுால் கொள்முதல் அனுமதி மறுப்பால் ரூ.பல கோடி நஷ்டம்:  நெசவாளர்கள் வேலை இழப்பு
ADVERTISEMENT
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு செயற்கை பட்டு நுால் உள்ளிட்ட கச்சா பொருள் கொள்முதல் அனுமதி வழங்கப்படாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக வேலையின்றி நெசவாளர்கள் தவிக்கின்றனர்.

பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் 82 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களுக்கு பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து செயற்கை பட்டு நூல் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படும். ஆனால் 2023 ஏப்., மே மாதங்களுக்கு செயற்கை பட்டு நுால் கொள்முதலுக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் நெசவாளர்களுக்கு தொழில் வழங்க முடியவில்லை. மே 15ல் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொழிலாளர் பெடரேஷன் சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மே 25ல் அனுமதி வழங்கப்படும், என்றனர்.

ஆனால் நேற்று (மே 29) வரை கொள்முதல் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜூன் 1 காலை 11:00 மணிக்கு கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மேலும், கோரிக்கை மனுவை சென்னை அரசு செயலாளர், சென்னை கைத்தறி ஆணையருக்கும் அனுப்பி உள்ளதாக பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement