Load Image
Advertisement

ஆன்லைன் லாட்டரிக்கு தடை விதிக்கப்படுமா?

 Will online lottery be banned?    ஆன்லைன் லாட்டரிக்கு தடை விதிக்கப்படுமா?
ADVERTISEMENT
பல்லடம்: தமிழகத்தில் சட்டவிரோதமாக நடத்தும், 'ஆன் லைன்' லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு 2003ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். இதைத் தொடர்ந்து, அண்டை மாநில லாட்டரிச் சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது. அதையும் தாண்டி தற்போது ஆன்லைன் லாட்டரி விற்பனை, சமூக வலைதளங்கள் வாயிலாக மும்முரமாக நடக்கிறது.

வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் குறுந்தகவல்களால், இதற்கான பிரசாரம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சமீபத்தில்தான் ஆன் லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.-


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement