Load Image
Advertisement

மேற்குவங்கத்தில் மம்தா கட்சிக்கு தாவிய காங்., எம்.எல்.ஏ.,

Mamata joins Congress, MLA in West Bengal   மேற்குவங்கத்தில் மம்தா கட்சிக்கு தாவிய காங்., எம்.எல்.ஏ.,
ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தின் ஒரே காங்., எம்.எல்.ஏ., பைரோன் பிஸ்வா , ஆளும் திரிணாமுல் காங்., கட்சியில் இணைந்தார்,


இம்மாநிலத்திற்கு கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்., 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைத்தார். எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா, தோல்வியுற்றார். இத்தேர்தலில் காங். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

Latest Tamil News
இந்த நிலையில், சாஹர்திகி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்.,வேட்பாளர் பைரோன் பிஸ்வா வெற்றிபெற்றார். இதன் மூலம் மேற்குவங்கத்தில் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பைரோன் பிஸ்வா செயல்பட்டு வந்த நிலையில், இன்று அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்.,மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதன் மூலம் காங்.,கட்சி உறுப்பினர்கள் இல்லாத மாநிலமானது மேற்குவங்கம்.


வாசகர் கருத்து (7)

  • ஆரூர் ரங் -

    சித்த ராமையா கூட நாலு கட்சித் தாவி காங்கிரசுக்கு வந்தவர்தான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. மூணு மாசத்துக்கு முன்னாடி இவரை😒 கஷ்டப்பட்டு ஜெயிக்க வைத்த கம்யூனிஸ்டுதான் வருந்தும்

  • குமரி குருவி -

    தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஐடியா கேட்டுகட்சி தாவி இருப்பாரோ

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தாவுவதற்கு நமது அரசியல்வாதிகளுக்கு சொல்லித்தரவா வேண்டும். குரங்கை விட நன்றாக தாவுவார்கள். குரங்குகள், இவர்கள் தாவுவதை பார்த்து ஆச்சர்யப்படும்..

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    காங்கிரசு கூடாரம் காலி ஆகிவிட்டது இனி இது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் காலி ஆகி, மூட்டையை கட்டிக்கொண்டு இத்தாலி சலோ என்று செல்ல வேண்டியதுதான்

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    சபாஷ் சரியான போட்டி. காங்கிரஸ் ன் நிலைமை இதுதான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்