அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அடுத்த தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1,500; விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தரப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தமிழக பொதுத்தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த வாக்குறுதியும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வாக்குறுதியை பின்பற்றி சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. திமுக.,வை போல காங்கிரசும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதே பாணியை தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் தனது கட்சி சார்பில் முதல்கட்ட வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அப்போது அவர், இதுவே தனது கடைசி தேர்தல் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

* ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும்.
* ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.20,000 வரை நிதியுதவி வழங்கப்படும்.
* ஆந்திர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசம்.
* புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
வாசகர் கருத்து (24)
வாக்காளர்களுக்கும் தகுதி நிர்ணயித்தால், ஒரு வேளை நிலைமை சரியாகலாம்.
சந்திரபாபு மீண்டும் தோற்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கின்றனர்
வாக்குறுதிகளை சரியாக, விலாவாரியாக அர்த்தம் புரியும்படி கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் என்றால், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்லுக்கு முன்பு பல வாக்குறுதிகளை வாரி இறைத்தது. தேர்தலில் ஜெயித்து, ஆட்சி பிடித்தபின், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று கூறி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது கர்நாடக பெண்களுக்கு மட்டும் அந்த இலவச பயணம் என்று கூறி ஏமாற்றுகிறது. அதுபோன்று நீங்களும் ஏமாறவேண்டாம். அரசியல்வாதிகளை நம்பவே நம்பாதீர்கள். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் எக்காரணம் கொண்டும் நம்பி ஏமாறாதீர்கள்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது ...??? தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கண்டிப்பாக அவசியம் இப்போது தேவைப்படுகிறது ,மேலும் கட்சிகள் இலவசத்தை அறிவித்தால் அந்தக் கட்சிகளைத் தேர்தலில் போட்டி இடத் தடை செய்ய வேண்டும் .
இதுபோன்ற வாக்குறுதிகளின் பாஞ்சிலட்சம்.