ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ஜ., 109 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏ.,க்கள் தேவை என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனையடுத்து காங்., கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 121 எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரசின் கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் காங்., ஆட்சி கவிழ்ந்தது. பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.
இந்தாண்டு இறுதியில் ம.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது பற்றி ஒரு விரிவான ஆலோசனை நடத்தினோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்திய பிரதேசத்தில் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (14)
பிஜேபி 30-50 சீட் ஜெயிக்கும்
பாஸ் கர்நாடகா manifesto அங்க அப்படியே குடு, bajrang dal தடை பண்ணு,200 சீட் வரும்
ஏதோ பையன் கனவு காண்கிறான். கனவுதானே, காணட்டும்.
கர்நாடக அரியைவிட மத்திய பிரதேச கோதுமைக்கு விவேகம் அதிகம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கட்டுமர கம்பெனி தொடக்கி வைத்த அக்கப்போரூ, காங்கிரஸ் கர்நாடகாவில் அதையே பாலோ செய்து ஆட்சியை பிடித்துவிட்டது. இனி கர்நாடக பாணியில் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட வேண்டியதுதானே. சொன்னதை செய் என்று மக்கள் கேட்கவா போகிறார்கள். சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகனுக்கு ஆப்பு வைப்பது போல இப்பவே ஆரம்பிச்சுட்டார். பெண்களுக்கு மாதம் 2000 ரூவா, இலவச பஸ் பயணம், காஸ் சிலிண்டருக்கு 200 ரூவா மான்யம் என்று. காசா பணமா வாக்குறுதிதானே அள்ளிவிட்டால் போச்சி. வரவிருக்கும் பாராளுமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் இல்லத்தரசிகளுக்கு வங்கிக்கணக்கில் மாதாமாதம் ஐந்தாம் தேதி 3500 ரூபாய் செலுத்துவோம் என்று அறிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை. மற்றபடி கல்விக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து, பத்து சவரன் வரை நகைக்கடன் ரத்து, இந்தியா முழுக்க பெண்களுக்கு இலவச பஸ் ரயில் பயணம் என்று கூட காங்கிரஸ் அறிவிக்கும். பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லை. இந்தமுறையும் கோட்டைவிட்டால் இனி எந்தக்காலத்திலும் இல்லை என்பதால் தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் அறிவிப்பார்கள்.