Load Image
Advertisement

ஜிஎஸ்எல்வி எஃப்-12; சிறப்பம்சங்கள் என்னென்ன?

GSLV F-12; What are the highlights?   ஜிஎஸ்எல்வி எஃப்-12; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ADVERTISEMENT
இன்று ஜிஎஸ்எல்வி எஃப்-12 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் சதீஷ் தாவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவியுள்ளனர். இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டு ஆர்பிட்டில் நிலை நிறுத்தப்படும் 15-வது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டான இதில் அதிநவீன விகாஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விண்வெளி, ராணுவம், கப்பற்படைகளில் பயன்படுத்தப்படும் லொகேஷன் சேவைகள், மொபிலிட்டி சேவைகள், ரிசோர்ஸ் மானிட்டரிங், சர்வேயிங், ஜியோடெசி, டைம் டெஸ்ஸ்மினேஷன், சிங்கரனைசேஷன், உயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவை ஜிஎஸ்எல்வி எஃப்-12-ல் உள்ளன. இதில் அதிநவீன எல்-1 பேண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் அதிக இடத்தை தனது ஒலியலைகள் மூலம் கவரும். நேரம், தினம், வருடத்தைக் கணக்கிட இந்த செயற்கைக்கோளுடன் அதிநவீன அட்டாமிக் கடிகாரம் இணைக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News
2.4 கிலோவாட் ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டு சோலார் அரேக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பஸ் லோட் மற்றும் பே லோட்கள் இயங்க, ஒரு லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 470 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோளில் பல்வேறு எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால் அதீத உஷ்ணம் உண்டாகும். இந்த உஷ்ணத்தைத் தணிக்க ஒருக்கிணைக்கப்பட்ட பை ஃப்ரொபல்லண்ட் சிஸ்டம் ஆக்டிவ் மற்றும் பேசிவ் தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன. இன்னும் 12 ஆண்டுகளுக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் இருந்து இயங்கும் அளவுக்கு இதில் ஆற்றல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவால் இந்த ஆண்டில் விண்ணில் ஏவப்படும் ஐந்தாவது செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-12.

இந்தியாவின் நிலவு குறித்த சோதனைக்கான முன்னேற்பாடுகள் ராஸ்காஸ்மாஸ், நாசா உள்ளிட்ட பல விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா படிப்படியாக முன்னேறி வருவது ஜிஎஸ்எல்வி எஃப்-12 மூலம் தெளிவாகிறது. சந்திராயன் 3 மிஷன் வரும் ஜூலை இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது. இதன் முன் ஏற்பாடாக ஜிஎஸ்எல்வி எஃப்-12 விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்திராயனை பூமியின் புவிவட்டப்பாதையில் இருந்து கண்காணிக்கும் செயற்கைக் கோள்களுள் ஒன்றாக இது விளங்குகிறது.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement