அழகான இடத்துக்குச் செல்லும்போது, அங்கேயே கொஞ்ச நாள் தங்கி விடலாம் என்று தோன்றும். அத்தகைய இடங்களில் குடியேறுவதற்கான செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். ஆனால், உலகின் சில சிறந்த இடங்களில் தங்குவதற்கு அந்த நாடே பணம் கொடுக்கிறதாம்... அப்படிப்பட்ட 5 இடங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
ப்ரெசிஸ்
ஆன்டிகிதெரா
இரண்டாவது இடத்தில் உள்ளது கிரேக்க தீவு ஆன்டிகிதெரா (Antikythera ). யாராவது இங்கு குடியேற முடிவு செய்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் அரசு அவருக்கு வழங்கும். தற்போது இந்த தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அதனால் இந்த தீவில் கூட்டம் இல்லாமல் ஜாலியாக வாழலாம்.
அல்பினென்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது சுவிட்சர்லாந்தை சேர்ந்த அல்பினென்(Albinen) என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் குடியேறும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு ரூ.20 லட்சமும், தம்பதிகளுக்கு ரூ.40 லட்சமும் வழங்குகிறது. இது தவிர குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டக்கூடாது என்பது மட்டும் தான் நிபந்தனை.
அலாஸ்கா
இந்த பட்டியலில் உள்ள நான்காவது இடம் அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா. பனி மற்றும் குளிரால் இங்கு வாழ்பவர்கள் குறைவு, ஆனால் இங்கு தங்குபவருக்கு ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1 வருடமாவது இங்கு தங்க வேண்டும் என்பது நிபந்தனை.
பொங்கா
பட்டியலில் ஐந்தாவது இடத்தில இருப்பது, ஸ்பெயினில் உள்ள பொங்கா என்ற கிராமம். மக்கள் தொகை குறைந்த இத்தகைய சூழ்நிலையில், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இளம் குடிமக்களை ஈர்க்கவும், ஒவ்வொரு தம்பதியருக்கும் இங்கு குடியேற உள்ளூர் அதிகாரிகளால் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் போது குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!