ADVERTISEMENT
மதுரை: ‛எனக்கு 69 வயது ஆனாலும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன்; 150 வயது வரை வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அந்த ரகசியத்தை 2026ல் என்னை அரியணையில் ஏற்றினால் உங்களுக்கு சொல்வேன்' என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரும் நடிகருமான சரத்குமார் பேசியுள்ளார்.
மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தின் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: நம் இயக்கம் எதை நோக்கி செல்ல வேண்டும், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், உங்கள் தலைவர், உங்கள் நாட்டாமை முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.
அது சாத்தியமா என்பது 2026ம் ஆண்டு தேர்தலின்போது தெரிய வரும். அதற்கெல்லாம் முயற்சி இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். உடல் வலிமை, மனவலிமை இருக்க வேண்டும்.
இதே இடத்தில் 2016ல் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்தோம். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டை எக்காரணத்துக்காகவும் தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
நாம் போராட்டம் எதற்காக நடத்துகிறோம் என்பதை உணர்ந்து நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன். பல்வேறு போதைகள் இன்று பரிணமித்துள்ளது. புகையிலை, சிகரெட், பான்மசாலா, கஞ்சா, போதை மாத்திரை, போதைப் பவுடர், ஊசி போன்ற பலவகையான போதை உருவெடுத்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருதை இல்லையென்று சொல்லவில்லை.
2025ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக, மனித வளம் அதிகமுள்ள நாடாக நம் நாடு இருக்கும். இதன் மூலம் இந்தியா வல்லரசு நாடாகி விடும் என்பதை அறிந்து இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்க வெளிநாடுகள் செய்யும் சதிதான் இது. எனக்கு 69 வயது ஆகிறது. ஆனால் இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன்.
இன்னும் 150 வயது வரை இருப்பேன். வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அந்த ரகசியத்தை 2026ம் ஆண்டு அரியணையில் என்னை ஏற்றும்போது உங்களுக்கு சொல்வேன். உழைப்பு, உயர்வு, நேர்மை இருக்கும்போது தமிழக மக்களுக்காக உறுதியாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (71)
சரக்கு அடிச்ச மப்புல உளறுகிறார் போல இருக்கு ....
உங்க ஆன் லைன் சூதாட்ட விந்தையால் உயிர்கள் போனதுதான் மிச்சம்
ஆசையைப் பாரு ..அஸ்கு ..புஸ்கு ...
இப்பவே நாட்டு மக்கள் எல்லாம் வாழ்க்கையை வெறுத்து காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் ,இந்த லட்சணத்தில் இன்னும் அதிக ஆண்டுகள் வாழ வேண்டுமா ..???நீயும் வேண்டாம் ,உங்க பொங்கச் சோறும் வேண்டாம்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்பவே ஐயாவுக்கு 167 வயசு ஆகுது.