Load Image
Advertisement

காலி நிலங்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய ஆவின் முடிவு

சென்னை,-பசுந்தீவனங்கள் பற்றாக்குறையை சமாளிக்க, காலி நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், பசுந்தீவனத்தை சாகுபடி செய்ய, ஆவின் முடிவெடுத்துள்ளது.
Latest Tamil News

ஆவின் நிறுவனம் வாயிலாக, மாநிலம் முழுதும், 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல் மிகவும் குறைவாக உள்ளதால், பால் பவுடர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. பால் உற்பத்தி குறைந்துள்ளது தான், கொள்முதல் குறைவுக்கு காரணம் என, ஆவின் அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.

ஒவ்வொரு கறவை மாடுகளும் குறைந்தபட்சம், 8 முதல், 10 லிட்டர் பால் கறந்தால், உற்பத்தி அதிகரிக்கும். தரமான கால்நடை தீவனங்களை, கறவை மாடுகளுக்கு வழங்கினால் தான் இது சாத்தியம்.
Latest Tamil News
இதற்காக, கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள நிலங்களிலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களிலும், பசுந்தீவன உற்பத்தி செய்யவும், அதை விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்கவும், ஆவின் முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகளை மாவட்டம்தோறும் துவக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்களின் நிலங்களில், அகத்தி கீரை, சூபாபுல் போன்ற தீவன மரங்களை வளர்க்கவும், அவற்றை ஆவின் வாயிலாக இலவசமாக வழங்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


வாசகர் கருத்து (11)

  • Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ

    aduththa nila aakkiramippukkum aattaiyaipppOduvathaRkum arumaiyaana thittam.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஒரு சில தனியார் பால் நிறுவனம் விற்கும் பால் கிட்டத்தட்ட ஆட்டுப்பால் போல வீச்சம் அடிக்கிறது .ஒருவேளை மாட்டுப் பாலோடு ஆட்டுப் பாலைக் கலக்கிறார்களோ என்னவோ.,அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்..

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தனியார் பாலில் பெரும்பாலும் கலப்படம் நிறைந்து இருக்கும், தரமும் ,சுவையும் முற்றிலும் இருக்கவே இருக்காது ...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அடுத்து ( A) avin அதாவது "ஏ" ஸ்கொயர் நிறுவனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அமுல் நிறுவனம் வளர ஆவின் பால் நிறுவனம் மெழுகுவர்த்தி போல் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்