ADVERTISEMENT
சென்னை : முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரி, அ.தி.மு.க.,வினர் இன்று, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வினர் இம்மாதம், 22ம் தேதி, கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினர். அப்பேரணியில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
எனவே, சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்கள் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, ஏற்கனவே பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடு, விஷச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்க, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், பழனிசாமி பங்கேற்பார் என, தெரிகிறது.
கலெக்டர் அலுவலகம் இல்லாத, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில், தமிழக அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆர்ப்பாட்டங்களை சரிவர நடத்தாத மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (2)
தமிழக வரலாற்றில் ஆளும் கட்சியாக இருக்கும் போதே ரைடில் சிக்கிய அரசுகள் என்றால் கட்டுமரமும் இந்த விடியா அரசும் தான். இந்த கேடுகெட்ட விடியா ஆட்சியை தமிழர்கள் அடித்து விரட்டுவார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எதுக்கு மிச்சம் மீதி இருக்கிற ஆட்சியிலே நாங்க கொஞ்சம் கொள்ளை அடிச்ச்சுட்டு அப்புறம் கலைக்கலாம்ன்னு சொல்ல வாரீங்களா??? நீங்க ரெண்டு கட்சியும் வீண்...................................