Load Image
Advertisement

மதுரை தெருவிளக்குகளை பராமரிக்க ஆளின்றி மிரட்டுது இருட்டு; எரிந்தாலும், ஒளிர்ந்தாலும் ஒருபயனும் இல்லை

Intimidation and darkness g Madurai street lights without anyone to maintain them g lit and lit are of no use.      மதுரை தெருவிளக்குகளை பராமரிக்க ஆளின்றி  மிரட்டுது இருட்டு;   எரிந்தாலும், ஒளிர்ந்தாலும் ஒருபயனும் இல்லை
ADVERTISEMENT
மதுரை, : மதுரை மாநகராட்சியில் உள்ள எல்.இ.டி., விளக்குகள் பெயருக்குத்தான் எரிகின்றனவே தவிர வெளிச்சமே இல்லை. இதனால் தெருக்களில் விளக்கு இருந்தும் மிரட்டுது இருட்டு என மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

மாநகராட்சி தெருக்களில் இருந்த குண்டு பல்பு விளக்குகள் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. மின்சாரத்தை அதிகம் வீணடிக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றி விட்டனர். அதற்கு பதிலாக இரவை பகலாக மாற்றும் அளவிற்கு பளிச்சென வெளிச்சம் தரும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்துகிறோம் என மாற்றி அமைத்தனர்.

ஆனால், இந்த எல்.இ.டி., தெரு விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. விளக்கு பொருத்திய மின் கம்பத்தின் கீழ சிறிய ஒளிவட்டம் மட்டுமே தெரிகிறது. இதனால் விளக்குகள் எரிந்தாலும் அப்பகுதி முழுவதும் பேதிய வெளிச்சமின்றி இருளாகத்தான் உள்ளது.

மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் வெளிச்சமான விளக்குகளை பொருத்த வேண்டும் என, கவுன்சிலர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், இதுவரை வெளிச்சமில்லாத விளக்குகள் தான் தெருக்களில் அழுதுவடிகின்றன.

இந்த விளக்குகளை பராமரிக்க தனி உதவிப்பொறியாளர் ஒருவர் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அந்த பணியிடத்தை காலி செய்து விட்டனர்.

அதனால் வார்டுஉதவி பொறியாளர்தான் தெரு விளக்கு பராமரிப்பு, பழுது குறித்தும் கவனிக்க வேண்டும். ஏற்கனவே கூடுதல் பணிப்பளுவால் தவிக்கும் இவர்களுக்கு இதுபெரும் இடையூறாக உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் வெளிச்சமான தெரு விளக்குகளை பொருத்தி, அதனை முறையாகபராமரிக்க, பழுதுநீக்க மீண்டும் தனி உதவிபொறியாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    அம்மாம் ஒசரத்துல எல்.இ.டி யை போட்டு காசுவாங்கிட்டு போயிருவானுக. அதை பராமரிப்பு செய்யவோ, பல்புகளை மாத்தவோ ஒரு வசதியும்.இருக்காது. இருட்டு திராவிடனுங்க மூளையே மூளை.

  • Godyes - Chennai,இந்தியா

    மதுரையை மேய்பவர் என்ன செய்கிறார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement