அரிசிக் கொம்பன் யானை வனப்பகுதியில் தஞ்சம்

இடுக்கி சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்த அரிசிக் கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து படிப்படியாக வந்து நேற்று முன்தினம் காலை, கம்பம் நகருக்குள் நுழைந்தது.
கம்பம், துணை மின்நிலையம் அருகில் உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்த யானை, மாலை 3:00 மணி வரை அங்கிருந்தது. பின் நந்தகோபாலசாமிநகரை ஒட்டியுள்ள வாழைத்தோப்பிற்கு வந்தது.
டாக்டர்கள் ஏமாற்றம்
வாழைத்தோப்பில், யானைக்கு மயக்கஊசி செலுத்த திட்டமிட்டது தோல்வியடைந்தது. சில தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை யானை சேதப்படுத்தியது.
முல்லைப் பெரியாற்றில் நீந்திய யானை, பலாப்பழம் சாப்பிட்டு, நாராயணத்தேவன்பட்டிக்கு கிழக்கு திசையில் சென்றது.
பின், நேற்று காலை அங்கிருந்து கூத்தனாட்சி மலை, யானைக் கெஜத்திற்கு வந்தது. அங்கிருந்து மேகமலை வனப்பகுதிக்குள் புகுந்தது.
அப்போது, ரேடியோ காலர் சிக்னல் துண்டிக்கப்பட்டது. வனத்துறையினர் யானை கெஜத்திலேயே முகாமிட்டு உள்ளனர். ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து வந்துள்ள சிறப்பு குழுவினர் யானையை தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
கும்கி யானைகள் வரவு
யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை நேற்று முன்தினம் இரவே வந்தது. அரிசி ராஜா, உதயன் என்ற கும்கி யானைகள் நேற்று மதியம் வந்தன.
3 கிலோ எடை குறைந்தது
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:
இந்த யானையை கண்காணித்து பிடிக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பிடித்தால் பரம்பிக்குளம் பகுதியில் விட திட்டம் உள்ளது. அதன் எடை, 3 கிலோ வரை குறைந்திருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
ஒரு அமைச்சருக்கு மிக அருகில் வந்தும் …கடமை தவறிவிட்டது அரிசிகொம்பன்.
ட்ரோன் மூலம் ஒலியெழுப்பி திசைதிருப்ப😶 அல்லது மயக்க மருந்து செலுத்த முடியாதா?
மிருகங்கள் வாழும் பகுதிகளில் நாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டு அவற்றை வதைக்கிறோம் !
யானையை பிடிக்க வேண்டிய வகையில் திமுக அரசு எழுதி இருக்கும் செலவு கணக்கு என்ன - இந்த வகையில் கிடச்சியின் வரவு முப்பது கோடி ரூபாய் ... இப்படியே ஒரு பாத்து யானை வந்தா முன்னூரூ கோடி ஆச்சு
வனப்பகுதியில் டி estate என்பது தான் காங்கிரஸ் கொள்கையை இருந்தது