Load Image
Advertisement

நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு

சென்னை,---நாணயவியல் அறிஞரும், 'தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு, வாழ்த்து மலர் வெளியிட உள்ளது.
Latest Tamil News

இதுகுறித்து, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

'தினமலர்' நிறுவனரான டி.வி.ராமசுப்பய்யர் - கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாக, நாகர்கோவில் அருகேயுள்ள வடிவீஸ்வரத்தில், 1933 ஜனவரி, 18ல் பிறந்தவர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இவர், தன் பட்டப் படிப்புகளை முடித்த பின், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

தமிழ் நாளிதழ்களில் முதலாவதாக எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதுடன், கம்ப்யூட்டருக்கு ஏற்ப தமிழ் எழுத்துருக்களையும் மாற்றினார். அத்துடன், சங்க கால தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆய்வு செய்தார். இவை குறித்து, 19 நுால்களையும் எழுதியுள்ளார்.

இவரின் கண்டுபிடிப்புகள், தமிழ் செம்மொழி அந்தஸ்துக்கான சான்றுகளாக, தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டன. இவரின் நற்பணிகளை பாராட்டி, 2012 - 2013ம் ஆண்டுக்கான, 'தொல்காப்பியர் விருது' ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
Latest Tamil News
இரா.கிருஷ்ணமூர்த்தி, 50 ஆண்டு காலம், தமிழ் மொழிக்கும், தமிழக வரலாற்றுக்கும் செய்த தொண்டை கவுரவிக்கும் வகையில், வாழ்த்து மலர் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக, சங்க இலக்கியம், நாணயவியல், தொல்லியல், வரலாறு, பண்பாடு, நடுகற்கள், சிற்பங்கள் குறித்த தலைப்புகளில், ஆய்வாளர்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ கட்டுரைகள் எழுதி, ஜூலை, 31க்குள், 'tvmchr@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு, 90475 78421 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நல்ல முயற்சி. பாராட்டுதலுக்குரிய ஒன்று கடந்த சில வருடங்களாகவே தமிழர்கள் இடையே சங்க வாழ்க்கை அரசமைப்பு நமது பண்பாடு பற்றி அறியும் ஆயும் ஆர்வம் பெருகி வருகிறது. அதற்கு மலரின் ஆசிரியரின் தொண்டும் காரணம். கீழடி ஆதிச்ச நல்லூர் போலவே இப்போது முசிறி பட்டணம் பற்றிய ஆய்வு மேலோங்கி இருக்கிறது. சேர நாட்டிற்கும் ரோமாபுரிக்கு இருந்த வணிக தொடர்புகள் மிளகு கொடுத்து பொன்பொருள் பெற்றது பற்றி அறிய முடிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்