ஆதார் தராத குழந்தை பெயர் ரேஷன் காடுகளில் நீக்கம்
சென்னை,- ரேஷன் கார்டு வாங்க, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, குடும்ப தலைவர், உறுப்பினர்கள் என, அனைவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எண் இருந்தால் பதிவேற்றலாம். இல்லையெனில், பிறப்பு சான்று பதிவேற்ற வேண்டும்.
ஆதார் இணைக்காத குழந்தைகளுக்கு 5 வயது மேல் ஆனதும், ஆதார் எண் பதிவேற்ற வேண்டும். பலர், 5 வயதை தாண்டியும் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.
அவர்களின் பட்டியலை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, ஆதார் எண்ணை பெறுமாறு, ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த விபரத்தை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு தெரிவிக்கவில்லை.
அதே சமயம், 5 வயதை தாண்டியும், ஆதார் இணைக்காத குழந்தைகளின் பெயர்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!