Load Image
Advertisement

பராக்கிரமங்களை உலகிற்கு பறைசாற்றுங்கள்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ..ஜி.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரின் மார்பளவு மற்றும் முழு உருவச் சிலையை, மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும்' என, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Latest Tamil News

அப்படி கருணாநிதியின் சிலைகளை மாவட்டந்தோறும் நிறுவும் போது, அவற்றின் பீடத்தில், அவரின் இந்த அரும்பெரும் சாதனைகளையும், பொன்னெழுத்துகளால் பொறித்தால், இனி வரும் தலைமுறையினரும், அதை படித்து மனம் தெளிவடைவர். அதாவது...

 மதுவிலக்கை நீக்கி, மதுவை ஆறாக ஓடச் செய்து, பல தலைமுறைகளை சீரழித்த பெருமகன் இவர்

 விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது எப்படி என்ற வித்தையை கண்டறிந்தவர்

 தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு வழிவகுத்தவர்; ஆட்சியாளர்களின் குடும்பங்கள் நிதி பற்றாக்குறையே இல்லாமல் இருக்க, குத்து விளக்கேற்றி வைத்தவர்

 முட்டாள்களையும், சுயநலக்காரர்களையும், சமூக விரோதிகளையும், ஊழல்வாதிகளையும், எம்.எல்.ஏ.,க்கள், மந்திரிகளாக்கி அழகு பார்த்தவர்

 ஹிந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசி, சிறுபான்மையினரை தாஜா செய்து, ஓட்டு வாங்கும் போலி மதசார்பின்மை வித்தையை அறிமுகப்படுத்தியவர்

 தலைநகர் சென்னையில், 'கூவத்தை மணக்கச் செய்வேன்' என்று சூளுரைத்து, சென்னை மக்களை மூக்கை பிடித்துக் கொண்டு ஓடச் செய்து, வரிப்பணத்தை சுரண்டிய செயல்வீரர்

 தி.மு.க., வளர பாடுபட்ட எம்.ஜி.ஆர்., மற்றும் வைகோ போன்றோரை, கட்சியிலிருந்து நீக்கி, நன்றி மறவாமையின் இலக்கணத்தை தமிழகத்திற்கு எடுத்துரைத்தவர்
Latest Tamil News
 இலங்கையில், தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்த போது, ரோமாபுரி மன்னன் நீரோவையே மிஞ்சும் வண்ணம், சென்னையில் அரை நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த, 'மாவீரர்!'

இப்படி நிறையச் சொல்லலாம். திராவிடச் செம்மல்களே... கருணாநிதி உருவச் சிலைகளின் பீடங்களில், அவரின் மேற்குறிப்பிட்ட, 'அரும்பெரும்' சாதனைகளை பொன்னெழுத்துகளால் பொறித்து வையுங்கள். இதன் வாயிலாக, அவரின் வீர தீர பராக்கிரமங்களை உலகிற்கு பறைசாற்றுங்கள்!


வாசகர் கருத்து (55)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மனிதனாகப் பிறந்த ஒருவர் எப்படி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கருணா ...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அதனால்தான் அந்த உத்தமரை ஊழலின் தந்தை, ஃபாதர் ஆஃப் கரெப்க்ஷன் என்று மக்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  கருணாநிதி செய்த தீய செயல்களில் முக்கியமானது மலர முடியாததை இங்கு மலர வழி செய்தது.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ரயில் டிக்கெட் எடுக்க ஒண்ணே கால் ரூபாய் காசு கூட இல்லாமல் இருந்து உலக மகா கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமா ,அது மிகப் பெரிய சாதனை அல்லவா ...???

 • rama adhavan - chennai,இந்தியா

  நீங்கள் தெரிவித்த வாசகங்களோடு உயர் நீதி மன்ற ஆணை பெற்று தமிழ் நாட்டில் எதிர் கட்சிகள் மாவட்டம் தோறும் ஓர் சிலையை அல்லது கல்வெட்டை வைக்க முயற்சி செய்யலாமே? மக்களுக்கும் தெரியும், புரியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்