Load Image
Advertisement

வெளிநாட்டுக்கு பறக்கிறார் ராகுல்: சர்ச்சை ஏற்படுமோ என காங்., கவலை

புதுடில்லி,-புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு, நேற்று புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
Latest Tamil News

இதையடுத்து, அவர் வெளிநாடு செல்கிறார். கடந்த முறை பிரிட்டனுக்கு சென்றபோது, சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் அவர் வெளிநாடு செல்வது, காங்., கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த 2015ல், ராகுல் உள்ளிட்டோருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரதமர்மோடியை அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து, எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை அடுத்து, சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்த ராகுல், சாதாரண பாஸ்போர்ட் கேட்டு, புதுடில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ராகுலுக்கு 3 ஆண்டுகள் சாதாரண பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்று அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராகுலுக்கு நேற்று புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ராகுல் அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் செல்ல உள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லும் ராகுல், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த மார்ச்சில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு ராகுல் சென்றார். அப்போது, உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் குறித்து, அங்கு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Latest Tamil News
'வெளிநாட்டிற்கு சென்று, தாய்நாட்டை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுகிறார்' என, பா.ஜ.,வினர் கடும்கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தம் உள்ளிட்ட விஷயங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், ராகுல் அமெரிக்கா செல்கிறார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் பேசி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுவாரோ என, மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (37)

 • Mohan - Salem,இந்தியா

  வேறு நாடுகள் நம நாட்டை குறை கூறுவது புதிதல்ல. நம் நாட்டை குறை கூற கூட்டங்களை வெளிநாட்டு ஏஜண்சிகளை பணம் கொடுத்த பயன் படுத்தும் பப்பு வின் குடும்ப அடிவருடிகள் சதி செய்து கொண்டே இருப்பர். அவர்களுக்கு பணம் வந்தா மட்டும் போதும்.

 • DVRR - Kolkata,இந்தியா

  நன்றாக யோசியுங்கள்???நீங்கள் வெளிநாடு அல்ல அசலூருக்கு செல்வீர்களா??ஏன்??இவ்வளவு செலவாகும், இவ்வளவு வேலை திரும்பி வந்த பின் செய்ய வேண்டும்...என்று பலமுறை யோசித்துத்தான் நாம் வெளி நாடு அல்ல அசலூருக்கே செல்லுவோம். அமெரிக்க செல்ல மட்டும் ரூ 86,000, திரும்பி வர தங்க உள்ளூரில் சில இடங்களுக்கு செல்ல - ஆகவே மொத்த செலவு ரூ 5 லட்சம் குறைந்தது. ???நெனச்சா இங்கிலாந்து நெனச்சா அமெரிக்கா???ஏன்???ஸ்டாலின் துபாய் எதற்கு போனார்??ரூ 6,100 கோடி????அதே போலத்தான் இதுவும்???காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் இருந்து கமிஷன் தினம் தினம் அல்லது குறைந்த பட்சம் வாராவாரம் வந்து விடும் அது ஒரு லெவலுக்கு மேலே சேர்த்திருச்சா வெளியூர் பயணம் அங்கு அதை சமர்ப்பிக்க / சேர்க்க. ஸ்டாலின் ரூ 6,100 கோடி என்றால் பப்பு குறைந்தது ரூ 61,000 கோடி???விஷயம் என்னவோ அதே தான்???

 • Narayanan - chennai,இந்தியா

  அப்படி ஏதும் பேசவேண்டாம் என்று சொல்லி அனுப்புங்கள் . அனைத்துக் கட்சி தலைவர்களும் ராகுலை சந்தித்து கூட்டணி யை வலுவாக்க நினைத்திருக்கும் போது இப்படி போனால் எப்படி ? இந்தியாவில் இருந்து கொண்டு அனைத்து கட்சியினர்களையும் கூப்பிட்டு பேசி தன்னை பிரதமராக அங்கீகரிக்க சொல்லி வலியுறுத்தி ஒரு முடிவை எடுத்து பிரச்சாரத்தில் இறங்குங்கள் ராகுல் அவர்களே

 • nandha kumar -

  அயல்நாட்டுகாரர் எப்படி இந்தியாவை சொந்தநாடாக நினைப்பார் அதான்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  கர்நாடகவில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வெடிக்கும் .அதை அறிந்தே இவன் வெளி நாடு ஓடுகிறான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்