Load Image
Advertisement

சாரட் வண்டிக்கு பதில் கார்: ராணுவம் புதிய முடிவு

டேராடூன்,-ஆண்டுதோறும் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில், குதிரைகள் பொருத்தப்பட்ட சாரட் வண்டிகளுக்கு பதில் கார்களை பயன்படுத்த, ராணுவ அகாடமி முடிவு செய்துள்ளது.
Latest Tamil News

கடந்த 1969ல், ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய ராணுவ அகாடமிக்கு குதிரைகள் பொருத்தப்பட்ட சாரட் வண்டியை, பாட்டியாலா மகாராஜா பரிசு அளித்தார்.

அணிவகுப்பு நடக்கும் இடத்திற்கு, சிறப்பு விருந்தினரை அழைத்து வருவதற்கு இந்த வண்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் அணிவகுப்பில், குதிரைகள் பொருத்தப்பட்ட பாட்டியாலா சாரட் வண்டிக்கு பதில், கார்களை பயன்படுத்த இந்திய ராணுவ அகாடமி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, இந்திய ராணுவ அகாடமியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வரும் 10ம் தேதி நடக்கும் அணிவகுப்பில், பாட்டியாலா சாரட் வண்டி இடம் பெறாது. அதற்கு பதில், கார்கள் பயன்படுத்தப்படும்.
Latest Tamil News
இதே போல், அகாடமியில் தற்போது சேவையில் உள்ள, ஜெய்ப்பூர் சாரட் வண்டி, விக்டோரியா சாரட் வண்டி உள்ளிட்டவையும் இனி அணிவகுப்பில் பயன்படுத்தப்படாது.

ராணுவ தலைமையகத்தின் உத்தரவுக்கு ஏற்ப, காலனித்துவ கால மரபுகளை கைவிட இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சாரட் வண்டிகளை, அகாடமியில் காட்சிப்படுத்துவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. குதிரைகளை பொறுத்தவரை, அவை பயிற்சிக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (8)

  • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

    அட பாவத்தை அப்படி பார்த்தல் பல்லக்கு வைத்து தான் தூக்கி வரவேண்டும் சாரட் என்பது அது ஒரு அலாதி காரிலே வந்து காரிலே போகும் மக்களுக்கு இது ஒரு புதுமையாக இருக்கும் இதில் என்ன காலனித்துவம் உள்ளது என்று புரியவில்லை

  • அப்புசாமி -

    சூப்பர். சங்க காலத்திலேயே சோழர்கள் கார்களைத்தான் பயன் படுத்தினர். மன்னன் பாரி பெட்ரோல் தீர்ந்து விட்டதால் காரை நிறுத்திட்டு நடந்து போயிட்டான். வரலாறு திரிக்கப்பட்டுவிட்டது. இனிமே கார்தான்.

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    நல்ல சிந்தனை . பிரிட்டிஷ் கால நிகழ்வுகளை தூக்கி விட்டு , நமது கலாசாரத்தின் அடிப்படையில் செய்வது சிறப்பு ....

  • Indhuindian - Chennai,இந்தியா

    அப்படியே இங்கே இருக்கற இங்கிலீஸ்காரன் சிலையெல்லாம் எதுத்து கடலிலே போட்டுடுங்க. அதெல்லாம் பாத்தா அவங்க நம்மளை அடிமையாகி சுதந்திர போராட்ட வீரர்களை சித்திரவதை செஞ்சதுதான் ஞாபகம் வருது. நாட்டுலே மதக்கலவரத்த தூண்டி விட்டதும் இந்த ஆங்கிலேயர்கள்தான். இங்கேந்து நம்முடைய கலாச்சாரத்தி கொள்ளை அதிச்சிட்டு போனதும் அவங்கதான். பள்ளிகளில் பாட புத்தகங்களில் அவன் வந்து இங்கே பள்ளிக்கூடம் கட்டினான், ரயில்வே லைன் போட்டானுஇருக்கற கதையெல்லாம் தூக்கி போட்டுட்டு அவன் நாட்டை கொள்ளை அடிக்கத்தான் வந்தானு மாத்தி ஏஷுதுங்க

  • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

    பாட்டியாலா மகாராஜாவின் சாரட் வண்டி,ஜெய்ப்பூர் சாரட் வண்டி, விக்டோரியா சாரட் வண்டி உள்ளிட்டவைகளை இனி பிரதமர் பயன்படுத்த வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்