மஹாராஷ்டிரா கோவில்களில் உடை கட்டுப்பாடு
நாக்பூர்-மஹாராஷ்டிர மாநிலத்தில் நான்கு முக்கிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தின் நான்கு முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; இது குறித்து கோவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் கூறியதாவது:
நாக்பூரில் உள்ள தாந்தோலி கோபாலகிருஷ்ணன் கோவில், பெலோரி சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோவில், கனோலிபாரா பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப்பில் உள்ள துர்கா மாதா கோவில் ஆகியவற்றில் உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கோவில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆட்சேபனைக்குரிய, அநாகரிகமான உடைகளை அணிந்து வரக் கூடாது.
அதாவது உடலை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ் போன்ற உடைகள், ஷார்ட்ஸ் போன்ற குட்டையான உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
நல்ல முடிவு. இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும்.
உருட்டுவதிற்கு கிடைத்து விட்டது. ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான். உடனே ஐயன் கார்த்திகேயன் ஆர்கே அருணன் கனகராஜ் கார்த்திகேயன் லெனின் போன்றவர்களின் வாய் கிழியும்.
This type of restrictions in dress code must be implemented in all the Indian HINDU temples.
அடாடா கிடைத்தது வடை.ஒரு கூட்டம் வேலை செய்ய ஆர்மபிக்கும், பத்து பேரை அப்படி இல்லாமல்கடவுள் நம்பிக்கையே இல்லாத சிலரை உடை அணிந்து செய்ய சொல்லும்.ஒரு மாதம் நான் இந்த மதம் என்பதால், இந்த கலர் என்பதால், இந்த மொழி என்பதால் என்று உருட்டோ உருட்டோ என்று உருட்டி விளையாடும்.அதற்கென்றே தயாரிக்க பட்ட மூத்த அறிவாளிகள் விவாதங்கள், பேட்டி என்று உலா வருவார்கள்.சித்தார்த் எங்கிருந்தாலும் ஒரு முறை அங்கே சென்று ஒரு புலம்பலை அவிழ்த்து விடுவான்.நம்ம பாப்புலர் குடும்பமும் ஏதாவது செய்யும்.பார்க்கலாம் தமாஸுகளை
பாரம்பரிய உடைகள் வாடகைக்கோ அல்லது வாங்குவதற்க்கோ தகுந்த ஏற்பாடுகள் செய்யலாமே ...