ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி

அனுமதி மறுப்பு
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அவர்கள் கல்வி கற்க அனுமதி மறுக்க பட்டது.இந்நிலையில், ஆப்கனின் சர் இ போல் பகுதியைச் சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீன், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக்., படிப்பை ரகசியமாக முடித்துஉள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:வீட்டில் இருந்தபடியே படித்ததால், முதல் இரண்டு செமஸ்டர்கள் கடினமாக இருந்தன.ஆய்வக வசதியை பெற முடியாததால், பேராசிரியரின் அறிவுறுத்தலின்படி, வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தைஉருவாக்கினேன். என் சகோதரி சமையலுக்கு பயன்படுத்தும் 'மைக்ரோவேவ் ஓவன்' நகைக்கடையில் பயன்படுத்தப்படும் குடுவைகள் ஆகியவற்றை வைத்து வீட்டிலேயே நிறுவிய ஆய்வகத்தில் பயிற்சி பெற்றேன்.

பட்டமளிப்பு விழா
வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ள நிலையில், சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. அடுத்து பிஎச்.டி., படிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர்கூறினார்.
வாசகர் கருத்து (11)
சென்னை ஐ ஐ டீ அவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதா .... வீட்டில் உள்ள மயக்கரோ வேவ், நகை கடை குடுவை வைத்து செய்முறை செய்தாராம், தேர்வு எப்படி நடத்த பட்டது .... பெருமைக்கு பெயர் தேடும் காலம் ஆகிவிட்டது கல்வி துறையில் ..இதையே ஒரு இந்தியா பிரஜை முயன்றால் அண்ணா ஐ ஐ டீ சென்னை விடுமா ... பெயர் கெடுகிறது , கல்வி சீரழிகிறது
இது திராவிட மாதிரியால் நிகழ்கிறது. வேறு எந்த ஐஐடியும் இப்படி செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் நமது தமிழக முதல்வர்
பேராசிரியரின் அறிவுறுத்தலின்படி, வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்கினேன்... இனி பசங்களுக்கு ட்ரைனிங்தான் மிச்சம்...எல்லாம் தயாரிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...
என்ன அபத்தம்? எப்படி ஒரு ஆப்கன் மாணவி சென்னை ஐஐடியில் படிக்க முடியும்? கல்வி கட்டணங்களை எவ்வாறு செலுத்துவார்?ஆப்கன் வங்கி எப்படி அதை அனுமதிக்கும்? நம்பமுடியவில்லை
பி.டெக் எங்கே படிச்சாராம்? அதுக்கு முன்னாடி எந்த மதரசாவில் ப்ளஸ் 2 படிச்சாராம்? இல்லே, ஐ.ஐ.டி மெட்ராசில் நேரா எம்.டெக் சேந்துட்டாராமா? எம்.டெக் என்ன மைக்ரோவேவ் எஞ்சினீரிங்க்லயா?