Load Image
Advertisement

வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் ரயில் : பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்

கோல்கட்டா : வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக, 'வந்தே பாரத்' ரயில் சேவையை, பிரதமர் மோடி நாளை (மே.,29)ம் தேதி, துவக்கி வைக்கிறார்.
Latest Tamil News

மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி மற்றும் அசாம் மாநிலம், கவுஹாத்தி இடையே, இயக்கப்பட உள்ள இந்த ரயில், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும், முதல் ரயிலாக இருக்கும்.

அதேநேரம், மேற்கு வங்கத்தில் மூன்றாவது ரயிலாகவும், தேசிய அளவில், 18வது ரயிலாகவும், இது இருக்கும். இந்த ரயில், நியூ ஜல்பைகுரி முதல் கவுஹாத்தி வரையிலான, 410 கி.மீ., துாரத்தை, ஆறு மணிநேரத்தில் கடக்க உள்ளது.
Latest Tamil News
இந்த ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும், நியூ அலிபுர்துவார், கோக்ரஜார், நியூ போங்கைகான், காமக்யா, நியூ -ஜல்பைகுரி, கவுஹாத்தி என, ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    'வந்தே பாரத்' ரயில்கள் இந்தியாவை இணைக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement